உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 15.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம்

"எல்லா வெழுத்தும் வெளிப்படக் கிளந்து சொல்லிய பள்ளி எழுதரு வளியிற் பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்

தகத்தெழு வளியிசை அரில்தப நாடி

207

அளபிற் கோடல் அந்தணர் மறைத்தே

அஃதிவண் நுவலா தெழுந்துபுறத் திசைக்கும்

22

மெய்தெரி வளியிசை அளவுநுவன் றிசினே' (தொல். பிறப்பு.20) என்று தொல்காப்பியப் பிறப்பியலிற் கூறியது தமிழ மறையையே யன்றி ஆரிய மறையையன்று.

முதலாவது, அந்தணர் என்னும் சொல் முனிவரைக் குறித்த தன்றும், தொல்காப்பியம் இலக்கணங் கூறுவது தமிழ் எழுத்து கட்கேயென்றும் அறிதல் வேண்டும்.

இரண்டாவது, “அஃதிவண் நுவலாது... அளவுநுவன் றிசினே" என்பதால், நுவலத்தக்க எழுத்தொலியையே நுவலாத தாகக் கூறுகின்றார் தொல்காப்பியர் என்றறிதல் வேண்டும். தொல்காப்பியத்தில் நுவலத்தக்க எழுத்துகள் தமிழ் எழுத்துகளே. ஆகையால், ஒப்பீட்டு (Comparative) முறையாலும் ஆரிய வெழுத்துப் பிறப்புக் குறிக்கப்படவில்லை.

தொல்காப்பியர் காலத்தில் ஆரிய மொழியில் இலக்கண மிருந்ததில்லை யென்று முன்னமே கூறப்பட்டது.

“அகத்தெழு வளியிசை.... நுவலாது,"

""

"புறத்திசைக்கும் மெய்தெரி வளியிசை....

நுவன்றிசினே” என்று று கூறுவதால்,

வாயினின்றும்

வெளிப்பட்டொலிக்கின்ற வடிவுதெரியும் எழுத்தொலியைக் கூறுகின்றாரென்றும், அங்ஙனம் வெளிப்படாது உள்ளேயே ஒலிக்கின்ற எழுத்தொலியைக் கூறவில்லையென்றும் தெரிகின்றது.

வடமொழி யெழுத்துகளெல்லாம் புறத்திசைத்து மெய் (வடிவு) தெரிகின்ற வொலிகளாதலின், அவற்றைத் தொல் காப்பியர் குறிக்கவில்லை யென்பது தேற்றம்.

பின் வேறு பொருளென் எனின், கூறுகின்றேன். தமிழ் நாட்டில், முனிவரும் யோகியரு மிருந்தமையும் அவர் யோகு