பண்டைத் தமிழகம்
217
ம்
தவறவே செய்வர். திருக்குறள் தனித்தமிழ் முறையில் இயற்றப் பட்டிருக்கவும், பரிமேலழகர் அதை ஆரியவழியாகக் கொண்டு, அறத்துப்பால் முகவுரையிலும் காமத்துப்பால் முகவுரையிலும் உண்மைக்கு மாறானவற்றை உரைத்துள்ளார், ஐந்திணையு தனித்தனி கூறப்படும்போது குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலையென்று பெயர் பெறுமென்றும், கோவையாய்க் கூறப்படும் போது களவு, கற்பு என இரு கைகோள்களாகக் கூறப்படு மென்றும் அவர் அறியாதுபோயினர். கோவையிலும், "முன்னைய நான்கும் முன்னதற் கென்ப" என்பதால் கைக்கிளை முன்னும், கூட்டத்தினால் ஐந்திணை இடையும், கூட்டம் நீடிக்காது மடலேற்றம் நிகழின் பெருந்திணை பின்னும் அமைந்திருத்தலும், முறையே நிகழ்கின்ற புணர்தல் பிரிதல் இருத்தல் அல்லது இரங்கல், ஊடல் என்பவை முறையே குறிஞ்சி, பாலை, முல்லை, நெய்தல், மருதம் என்னும் ஐந்திணைகளா யமைதலும் அவர் அறிந்திலர் போலும். உளநூல் (Psychology)
தொல்காப்பிய மெய்ப்பாட்டியலில்,
"எள்ளல் இளமை பேதைமை மடனென் றுள்ளப் பட்ட நகைநான் கென்ப
""
"இளிவே இழவே அசைவே வறுமையென விளிவில் கொள்கை அழுகை நான்கே
66
(4)
""
(5)
"மூப்பே பிணியே வருத்தம் மென்மையோ டியாப்புற வந்த இளிவரல் நான்கே
"2
"புதுமை பெருமை சிறுமை ஆக்கமொடு மதிமை சாலா மருட்கை நான்கே
""
"அணங்கே விலங்கே கள்வர்தம் இறையெனப்
""
(6)
(7)
.
பிணங்கல் சாலா அச்சம் நான்கே
(8)
“கல்வி தறுகண் புகழ்மை கொடையெனச் சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே"
(9)
"உறுப்பறை குடிகோள் அலைகொலை என்ற
வெறுப்ப வந்த வெகுளி நான்கே”
(10)