பண்டைத் தமிழகம்
219
அவை தாமரை குவளை சங்கம் வெள்ளம் ஆம்பல் முதலியன. பரிபாடல் 2ஆம் பாட்டில் "நெய்தலுங் குவளையும் ஆம்பலும் சங்கமும்" என்று சில மிகப் பேரெண்கள் கூறப்பட்டுள்ளன. சங்கம் இலக்கங் கோடியென்றும், தாமரை கோடாகோடி யென்றும்
சொல்லப்படுகின்றது.
தொல்காப்பியத்திற் சொல்லப்பட்டுள்ள துண்மையாயின், பண்டைத் தமிழில் ஆயிரத்துக்கு மேற்பட்ட பதிற்றிடப் பேரெண் கட்குத் தனிப்பெயரில்லை. இதனால், அதற்குமேல் தமிழர்க்கு எண்ணத் தெரியாதென்று கொள்ளற்க. ஆயிரம், நூறு, பத்து என்னும் எண்ணுப்பெயர்களையே உறழ்ந்து, இலக்கத்தை நூறாயிரமென்றும் பத்திலக்கத்தைப் பத்துநூறாயிரமென்றும், கோடியை நூறு நூறாயிர மென்றும் கூறினர் என்றே கொள்ளப்படும். தொல்காப்பியத்தில் பதினூறாயிரம் வரை கூறப் பட்டுள்ளது. ஆங்கிலத்திலும், hundred thou- sand, two hundred million என்று இன்றும் கூறுதல் காண்க.
இலக்கம் (லக்ஷம், Skt., lakh, Eng.), கோடி (கோட்டி, Skt., crore, Eng.) என்னும் பெயர்கள் பிற்காலத்தனவா யிருக்கலாம். ஆனால், அவை இந்தியாவினின்றே தோன்றினதாகத் தெரிகின்றது. கோடி என்று தமிழிலும், குடோடு என்று இந்துஸ்தானியிலும், குரோர் (crore) என்று ஆங்கிலத்திலும் வழங்குதல் காண்க.
இலக்கம் கோடி யென்பன தமிழ்ப் பெயர்களாயின், முறையே, பெரிய இலக்கம் (எண்) என்றும், கடைசியெண் என்றும் பொருள் படுவனவாகும். இவற்றுள் இலக்கம் முன்னும் கோடி பின்னும் தோன்றினவென்பதை, ஆயிரப்பத்து பத்தாயிரம், பத்தாயிரப்பத்து நூறாயிரம், பத்து நூறாயிரம், பத்து நூறாயிரப்பத்து பத்திலக்கங்கோடி (பத்திலக்கம் அல்லது கோடி) என்னும் எண்சுவடி வாய்பாட்டால் அறியலாம்.
நூறாயிரப்பத்து
பண்டைத் தமிழர் கணிதத்தில் மிகச் சிறந்தவர் என்பதற்குச் ான்றாக இரண்டோர் அளவை வாய்பாடுகளை இங்குக் குறிக்கின்றேன்.