உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 15.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம்

233

இலக்கக்கணக்கான நெசவுத்தொழின் மக்கள் பசியால் மடிந்து கொண்டிருந்தனர். நாட்டிலுள்ள முன்றவற்றெண்ணம் (prejudice) பற்றி, அவர்கள் அவமானப்பட்டன்றிப் பிற தொழிலையும் மேற்கொள்ள முடியாது. முந்திய காலத்தில் நூல்நூற்றுத் தங்கள் குடும்பத்தைக் காத்துவந்த, கணக்கற்ற கைம்பெண்களும் பிற பெண்டிரும் வேலையிழந்து பிழைப்பற்றிருந்ததைக் கண்டேன். யான் எங்குச் சென்றாலும் ஒரே துன்பத்தோற்றம் எனக்கு எதிரே நின்றது என்று 18ஆம் நூற்றாண்டில் மைசூர் நாட்டில் விடையூழியம் செய்த அப்பே டூபாய்ஸ் (Abbe Dubois) கூறு கின்றார்.

    • 26

பண்டைக் காலத்திற் பெண்டிர் நூல் நூற்றமையை நக்கீரர், கபிலர், பவணந்தி முதலியோருங் கூறியுள்ளனர். 'பருத்திப் பெண்டு' என்று புறநானூறு (125,326) கூறும்.

"நூலினு மயிரினு நுழைநூற் பட்டினும் பால்வகை தெரியாப் பன்னூ றடுக்கத்து

நறுமடி செறிந்த வறுவை வீதியும்"

(சிலப். 14 : 205-7)

என்று இளங்கோவடிகள் கூறுவதால், பண்டைத் தமிழர் நெசவின் பெருமை விளங்கும்.

“மயிரினும்” என்பதற்கு "எலிமயிரினாலும்" என்று பொருள் கூறியுள்ளார் அடியார்க்குநல்லார்.

மயிர் நிறைந்த ஒருவகை மலையெலி பண்டை பண்டைத் தமிழ் நாட்டிலிருந்த தென்பதும், அதன் மயிரால் சிறந்த கம்பளம் நெய்யப்பட்ட தென்பதும்,

"புகழ்வரைச் சென்னிமேற் பூசையிற் பெரியன

""

பவளமே யனையன பன்மயிர்ப் பேரெலி

(1898)

"செந்நெ ருப்புணுஞ் செவ்வெ லிம்மயி

ரந்நெ ருப்பள வாய்பொற் கம்பலம்”

(2686)

என்று சிந்தாமணி கூறுவதா லறியப்படும். பலவகைத் துணிகள் பண்டைத் தமிழ்நாட்டில் நெய்யப்பட்டமை,

66

'துகில் (ஆடை): கோசிகம், பீதகம், பச்சிலை, அரத்தம், நுண்டுகில், சுண்ணம், வடகம், பஞ்சு, இரட்டு, பாடகம்,

26 Hindu Manners, Customs and Ceremonies, Ch. VI.