பண்டைத் தமிழகம்
235
அதிலும் தைப்புத் தொழிலுள்ளமையின். வண்டியைத் தைக்க வேண்டும் என்று தச்சர் கூறும் வழக்கை நோக்குக. தைத்தல் பல வுறுப்புகளை ஒன்றாயிணைத்தல். நெசவில் நூல்கள் ஒன்றாயிணைக்கப்படலும், தச்சில் வண்டியாயின் குறடு ஆரை சூட்டு என்னும் உறுப்புகளும், பெட்டி நாற்காலியாயின் பலகை களும் கால்களும் ஒன்றாயிணைக்கப்படலும் காண்க.
வாணிகம் (Commerce)
வாணி என்னும் சொல் வாய்நீர் என்பதினின்று பிறந்ததாகவும் கொள்ள இடமுண்டு. வாய்நீரை வாணீர் என்பது கொச்சை வழக்கு. ஒ.நோ: குறுநொய் - குறுணை. தண்ணீர் தண்ணி எனப்படுவதுபோல, வாணீர் வாணி எனப்படும். வாய்நீருக்கு மறுபெயர் சொள்ளு என்பது. சொளுசொளு என்று வடிவது சொள்ளு. பேசத் தொடங்கும் பருவத்தில் குழந்தைகட்குச் சொள்ளு வடியும். சொள்ளு மிகுதியாய் வடிந்தால் பேச்சு மிகுதியாகும் என்றொரு கொள்கையுளது. 'சொள்ளும் பெருத்தால் சொல்லுப் பெருக்கும்' என்பது பழமொழி. சொள்ளு - சொல்லு -சொல். வாய் நீர் - வாணீர் - வாணி = நீர், சொல்.
வாணி-பாணி.
கொச்சை வழக்கிலிருந்தும் சில சொற்கள் கொள்ளப்படும். கா. கொண்டுவா-(கொண்டா-கொணா கொணர்,பழம்-பயம்.
-
வாணி என்பதற்கு வாச் என்று வடமொழி மூலங் காட்டினும், அதற்கும் வாய் என்னும் தமிழ்ச்சொல்லே மூலமாதல் காண்க.
வாணி + இகம் கம் = வாணிகம். வாணி = சொல். சொல்லுதல் என்று பொருள்படும் வாணிகம் என்னும் சொல், விலை சொல்லுதல் என்னும் பொருளில் பண்டமாற்றைக் குறிப்பதாகும். ஒ.நோ: பகர்தல் = சொல்லுதல், விற்றல். நொடுத்தல் = சொல்லுதல், விற்றல். நொடி கதை. நொடை = விற்பனை.
=
=
வாணி என்னும் சொல் வழக்கிலில்லாமையினாலேயே வடசொல்லாகக் கருதப்படுகின்றது, பாணி என்னுஞ் சொல் போல. வர்த்தகம், வியாபாரம், வைசியம் என்னும் சொற்களே வட சொற்கள். வானி (வான் +இ) என்னுஞ் சொல் வாணியென்று திரிந்திருக்கலாம். ஒலியை வானத்தின் பண்பாக முன்னோர் கருதினர். வாணிகம் என்பது வணிகம் என்று குறுகியும் வழங்கும்.