உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 15.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம்

"கலஞ்செய் கம்மியர்" "கலம்புணர் கம்மியர்'

மணிமேகலையிலும்,

"நீரினின்று நிலத்தேற்றவு

நிலத்தினின்று நீர்பரப்பவு

மளந்தறியாப் பலபண்டம்

237 என்று

என்றும்,

வரம்பறியாமை வந்தீண்டி யருங்கடிப் பெருங்காப்பின் வலியுடை வல்லணங்கினோன் புலிபொறித்துப் புறம்போக்கி மதிநிறைந்த மலிபண்டம்

பொதிமூடைப் போர்"

"நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்”

என்று பட்டினப்பாலையிலும்,

66

(பட்டினப். 1130-7)

று

இலங்குநீர் வரைப்பிற் கலங்கரை விளக்கமும்”30 என் சிலப்பதிகாரத்திலும் றியிருப்பதால், பண்டைத்தமிழரின் கலஞ்செய்வினையும்(Ship building) நீர்வாணிகமும் நன்றாய் விளங்கும்.

வாரித்துறைபற்றிய பல தமிழ்ச்சொற்கள் மேலையாரிய

மொழிகளில் வழங்குகின்றன. அவையாவன :

வாரி = கடல். வார் + இ = வாரி. வார்தல் நீளுதல்.

"வார்தல் போகல் ஒழுகல் மூன்றும்

நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள்'

என்பது தொல்காப்பியம்,

(2 fl. 21)

நீர் ஓரிடத்தினின்று நீள்வதால் நீர் என்றும் வாரி யென்றும் கூறப்பட்டது.

நீள் -நீர்.ஒ.நோ: கள் - கரு (நிறம்). தெள் - தெருள். வார் + = வாரிதி (வ.). வார் + அணம் =வாரணம்.

வாரி, வாரிதி,வாரணம் என்னும் நீர்ப்பெயர்கள், சிறந்த நீர்நிலையும் பிற நீர்நிலைகட்குக் காரணமுமான கடலைக் குறித்தன. 30 கலங்கரை விளக்கம் - Light House.