உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 15.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடமொழியாளர் கொள்கைகளையெல்லாம் பிய்த்தெறிந்து, தமிழ்மொழி முதல் முதன்மை யுடைத் தென்றும்,அது ஒப்புயர்வில்லாத் தனி மொழி யென்றும், தமிழ் மொழிக்கும் தமிழர்க்கும் வடமொழியும் வடமொழியாளரும் கடப்பாடுடைய ரென்றும் திரு.பாவாணர் தம் நூலில் நிலை நாட்டி யுள்ளார்.

தமிழ்மக்கள் என்று பெருமை பாராட்டிக் கொள்ளும் ஒவ்வொருவர் கையிலும் இந்த ஒப்பியன் மொழிநூல் சுவடி இருக்க வேண்டும். அவர்கள் அதனைப் பன் முறையும் ஊன்றிப் படிக்க வேண்டும். அதிற்கண்ட கருத்துக்களை மனதிற்பதிக்க வேண்டும். நம் தண்டமிழ்த் தாய்மொழியை இழித்துரைக்கும் எவரையும் திரு.பாவாணர் உதவிகொண்டு வாயடக்கித் தமிழ் மக்கள் தம் தாய்மொழிப் பற்றினை நிலைநாட்ட வேண்டும்.

- தமிழவேள் த.வே.உமாமகேசுவரம் பிள்ளை

தமிழ்மன்

குறக்கட்டவை

சென்னை

600

017

‘பெரியார் குடில்’

பி.11. குல்மொகர் குடியிருப்பு,

35, செவாலியே சிவாசி கணேசன் சாலை, தியாகராயர்நகர், சென்னை - 17.