உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 15.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

ஒப்பியன் மொழிநூல்

வடநாட்டில், ஆரியரும் ஆரியர்க்கு முந்தின பழங்குடிகளும் பெரும்பாலும் கலந்துபோனமையின், பிற்காலத்தில் வட நாட்டார்க் கெல்லாம் பொதுவாக 'வடவர்' 'ஆரியர்' என்னும் பெயர்கள் தமிழ் நூல்களில் வழங்கிவருகின்றன.

ஆரியம் என்னும் பெயரால் தமிழ்நாட்டில் கேழ்வரகு தவிர வேறு ஒரு பொருளுங் குறிக்கப்படுவதில்லை. ஆரியக் கூத்து என்பது தமிழ்நாட்டில் இசைத் தமிழும் நாடகத் தமிழும் வழக்கற்றபின், வடநாட்டார் வந்து ஆடிய நாடகத்திறமேயன்றி, பல்கலைக்கழக அகராதியிற் குறிக்கப்பட்டுள்ளபடி கழைக் கூத்தன்று.

ஆரியன் என்னும் பெயருக்கு, ஆசிரியன், பெரியோன், பூசாரியன் முதலிய பொருள்களெல்லாம் தமிழில் தோன்றினது தமிழ்நாட்டில் பார்ப்பனத் தலைமை ஏற்பட்ட பிற்காலத்தேயாகும். இப் பொருள்களும் நூல் வழக்கேயன்றி உலக வழக்காகா.

வடமொழி, தென்மொழியின் தென்மொழியின் செவிலித்தாயென்றும், நற்றாயென்றும், இந்தியப் பொதுமொழியென்றும் ஆராய்ச்சி யில்லாத பலர் கூறி வருகின்றனர். உலக மொழிகளில், ஆரிய மொழிகளும் திராவிட மொழிகளும் மொழிநிலையில் மிக வேறு பட்டனவாகும். திராவிடக் குடும்பம் மிக இயல்பானதும் ஆரியக் குடும்பம் மிகத் திரிந்ததுமாகும். அவற்றுள்ளும், இயல்பிற் சிறந்த தமிழும் திரிபில் முதிர்ந்த வடமொழியும் மிக மிக வேறு பட்டனவாகும்.

1.

2.

வடமொழிக்கும் தென்மொழிக்கும் வேறுபாடு

எழுத்துகளின் தொகை (உண்மையானபடி) வட மொழியில் 42; தென்மொழியில் 30.

வடமொழியொலிகள் வலியன; தென்மொழியொலிகள்

மெலியன

3. மூச்சொலிகள் வடமொழியில் மட்டுமுண்டு.

4. கூட்டெழுத்துகள் தென்மொழியில் இல்லை.

5.

வடமொழியில் உயிர்கள் (தீர்க்கம், குணம், விருத்தியென மூவகையில்) நெடிலாக மாறிப் புணரும்; தென்மொழியில் உடன்படுமெய் பெற்றுப் புணரும்.