உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 15.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

ஒப்பியன் மொழிநூல்

பார்ப்பான் என்று அகநானூற்றிலும் குறிக்கப்படுவதால், அது தவறாதல் காண்க. மேலும், 'அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்' என்னும் நூற்பாவில்,

"மறுவில் செய்தி மூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும்

என்று சித்தரும்,

"நாலிரு வழக்கிற் றாபதப் பக்கமும் "

""

என்று தவத்தோரும் பார்ப்பாரினின்றும் வேறாகக் குறிக்கப் படுதல் காண்க. இதனாலும், பார்ப்பனர் இல்லறத்தார்க் கொப்பவே எண்ணப்பட்டதை அறியலாம்.

பார்ப்பார் தமிழ்நாட்டிலிருந்தமைபற்றித் தொல்காப்பியத் திற் கூறப்பட்டனரேயன்றி, அவர் தமிழரே என்னுங் கருத்துப்பற்றி யன்று. இதுபோது தமிழ்நாட்டுக் குலங்களைக் குறிப்பின், ஐரோப்பியரும், சட்டைக்காரரும் குறிக்கப்படுவரன்றோ? அங்ஙனமே தொல்காப்பியர் காலப் பார்ப்பனருமென்க.

மேலும் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்று

தொல்காப்பிய மரபியலிற் கூறியவை, மருத நகரில் உழவர் குலத்தினின்றும் ம் முதன்முதல் தோன்றிய நாற்பெரும் பிரிவுகளேயன்றிப் பிற்காலத்துத் தோன்றிய பல சிறுசிறு குலங்களல்ல. தொல்காப்பியர் காலத்தில், மருத நகரில் பல குலங்களிருந்தன. ஆனால், பழைய முறைப்படி, நாற்பெரும் பிரிவுகளே கூறப்பட்டன. இப் ப் பிரிவுகளுள் ஆரியப் பார்ப்பார் அடங்கார், அயலாராகவும் தமிழர் குலமுறைக்குப் பொருந்தாமலு மிருத்தலின். பார்ப்பார் (முனிவரான) அந்தணருமல்லர், அரசரு மல்லர், வணிகருமல்லர், வேளாளருமல்லர்.

அந்தணர் முதலிய நாற்பாலும் மரபியலிற் கூறப்பட்டது தமிழ் முறைபற்றியே என்பதை,

"வேளாண் மாந்தர்க் குழுதூண் அல்ல

தில்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி"

"வேந்துவிடு தொழிலிற் படையும் கண்ணியும்

(தொல். மரபு. 76)

வாய்ந்தனர் என்ப அவர்பெறும் பொருளே" (தொல். மரபு. 77)

என்னும் நூற்பாக்களான் உணர்க.