50
ஒப்பியன் மொழிநூல்
பிறிதுதொழி லறியா வாகலி னன்றும் மெல்லிய பெரும தாமே.....
செருமிகு சேஎய்நிற் பாடுநர் கையே"
(புறம்.14)
இது "சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதன் கபிலர் கைப்பற்றி, 'மெல்லியவாமால் நுங்கை' எனக் கபிலர் பாடி
யது”.
உப்புக்கண்டம் பறிகொடுத்த பார்ப்பாத்திபோல' என்னும்
பழமொழியும் இங்கு நோக்கத்தக்கது.
இவற்றினின்றும், ஊனுண்ணாமை தமிழர் ஒழுக்காறே என்பது
புலனாகும்.
ஒவ்வொரு நாட்டிலும் அது எத்துணை நாகரிகமடைந் திருப்பினும் நாகரிகம், அநாகரிகம் அல்லது உயர்ந்தது, தாழ்ந்தது என்னும் இரு கூறுகள் அருகருகே இருந்துகொண்டே யிருக்கும். தமிழ்நாட்டில் அங்ஙன மிருப்பவற்றுள் ஒவ்வொரு வகையிலும் உயர்ந்ததையே தெரிந்துகொண்டனர் பார்ப்பனர். அதனாலேயே, அவர் எதிலும் உயர்வாகவே காணப்படுகின்றனர்.
பார்ப்பனர் தமிழரிடத்தில் நாகரிகம் பெற்றவரேயன்றித் தாம் அவர்க்குத் தந்தவரல்லர்; தமிழரிடத்தினின்றும் தாம் பெற்ற நாகரிகத்தையே ஆரியப் பூச்சுப்பூசி வேறாகக் காட்டுகின்றனர். ஆரியப் பூச்சாவது குலப்பிரிவினையும், பார்ப்பன வுயர்வும்.
தமிழர் ஆரியரிடத்தினின்று நாகரிகம் பெற்றவராயின், ஆரியர் வருமுன் தலைசிறந்த நாகரிகத்தை யடைந்திருந்து, அவர் வந்தபின் ஏன் வரவரத் தாழ்ந்துவரவேண்டும்? ஆகையால், அக் கொள்கை ண்மைக்கும், இயற்கைக்கும் மாறானதென்று விடுக்க.
த
பார்ப்பனர் மதிநுட்பமுடையவர் எனல்
பார்ப்பனர் இதுபோது மதிநுட்பமுடையவரெனல் உண்மையே. ஆனால், அது எதனால் வந்தது? ஐயாயிரம் ஆண்டுகளாகப் பார்ப்பனருக்குக் கல்வியே குலத்தொழிலாயிருந்து வருதலால், பிறப்பிலேயே அவர்க்குக் கற்குந்திறன் சிறப்ப வாய்ந்துள்ளது. "குலவித்தை கல்லாமற் பாகம் படும்" என்றார் முன்றுறை யரையனார். மகனறிவு, தந்தையறிவு என்றபடி
66
ஒரு