உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 15.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1

மொழிநூல்

1. மொழி

மொழியாவது மக்கள் தம் கருத்தை ஒருவருக்கொருவர் வெளியிடுதற்குக் கருவியாகும் ஒலித்தொகுதி.

2.மொழிவகை

உலக மொழிகள் மொத்தம் 860 என்று பல்பி (Balbi) என்பவர் தமது திணைப்படத்தில் (Atlas) குறிக்கின்றார். மாக்ஸ் முல்லர் (Max Muller) அவை தொள்ளாயிரத்திற்குக் குறையா என்கிறார்.' ஏறத்தாழ ஆயிரம் எனினும் தவறாகாது.

மொழிகளையெல்லாம், பலப்பல முறையில், பலப்பல வகையாக வகுக்கலாம். அவ் வகைகளாவன:

(1) அசைநிலை (Monosyllabic or Isolating), புணர்நி (Compounding), பகுசொன்னிலை (Inflectional or Polysyllabic), தொகுநிலை (Synthetic), பல்தொகுநிலை (Polysynthetic) அல்லது கொளுவுநிலை (Ag- glutinative), பிரிநிலை (Analytical) என்று அறு வகையாக வகுப்பது ஒரு முறை. அவற்றுள்,

அசைநிலையாவது, சொற்களெல்லாம் ஓரசையாக நிற்பது.

காட்டு: வள், செல்,வா, போ, தமிழ், மொழி.

சீனமொழி அசைநிலைக்குச் சிறந்ததாகும்.

புணர்நிலையாவது, இரு தனிச்சொற்கள் புணர்ந்து நிற்பது.

கா: தமிழ்மொழி, மருமகன்.

1 Lectures on the Science of Language, Vol. I, p. 27.