உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 15.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழிநூல்

81

(8) செம்மொழி அல்லது திருந்தியமொழி (Cultivated Language), புன்மொழி அல்லது திருந்தாமொழி (Uncultivated Language) என இருவகையாக வகுப்பது ஒருமுறை.

திராவிடக் குடும்பத்தில், தமிழ், தெலுங்கு முதலிய செம்மொழிகள்; துடா, கோட்டா முதலியவை புன்மொழிகள்.

(9) அலைமொழி (Nomad Language), நிலைமொழி (State Language) என இருவகையாக வகுப்பது ஒரு முறை.

அலைந்து திரியும் மக்கள் பேசுவது அலைமொழி; ஓரிடத்தில் நிலைத்த மக்கள் பேசுவது நிலைமொழி.

(10) தாய்மொழி (Mother Tongue), அயன்மொழி (Foreign Language) என இருவகையாக வகுப்பது ஒருமுறை.

(11) வழங்குமொழி (Living Language), வழங்காமொழி (Dead Lan- guage) என இருவகையாக வகுப்பது ஒருமுறை.

இவற்றுக்கு, முறையே, தமிழையும் வடமொழியையும் காட்டாகக்

கொள்க.

ஒரு பெருமொழியில் பல வழக்குகள்(Dialect) உண்டு. அவற்றை மொழிவழக்கெனலாம். அவை, இடவழக்கு (Local Dialect), திசைவழக்கு (Provincial Dialect), குலவழக்கு (Class Dialect), திணைவழக்கு (Regional Dia- lect) என நால்வகைப்படும்.

ஒரு மொழி நீடித்து வழங்குமாயின், முற்கால (Old) வழக்கு, இடைக்கால(Middle) வழக்கு, தற்கால (Modern) வழக்கு என முந்நிலைகளை யடைந்திருக்கும்.

ஒரு மொழி உயர்ந்ததும் தாழ்ந்ததுமான இருவழக்குகளை யுடையதாயிருப்பின், அவை முறையே உயர் (High), தாழ் (Low) என்னும் அடைகள்பெற்று, அம்மொழிப் பெயராற் குறிக்கப்படும் (கா: உயர்ஜெர்மன் - High German, தாழ் ஜெர்மன் - Low German). தமிழில் இவை செந்தமிழ் கொடுந்தமிழ் என வழங்கும்.

ஒரு மொழியில், எழுத்தில் வழங்கும் வழக்கு நூல்வழக்கு (Literary Dialect) என்றும், பேச்சில் வழங்கும் வழக்கு உலக வழக்கு (Col- loquial Dialect) என்றும் கூறப்படும்.