உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ்மொழித் தோற்றம்

91

என்னும் வழக்குகளாலுணர்க. எ-e; எக்கு - ec, ex. எகரவொலியே பண்டு e என்னும் ஆங்கில வெழுத்திற்கு மிருந்தது.

ஏ என்னும் ஒலி, ஒருவனுக்குள்ளிருந்து வருவதால், அவன் தன்னைக் குறிக்கும் தன்மைப் பெயரடியாயிற்று. ஏன் - யான் - நான்.

ஏகாரம் எழலைக் குறித்தலால் ஓகாரம்போல வினாப் பொருட்கும் ஏற்றது.

கா: ஏது, ஏவன் (முதல்); அவனே, வந்தானே (ஈறு)

ஏ - எ. கா: எது, எவன், என்.

ஏ - யா.கா: யாது, யாவன், யார்.

ஏகாரத்தின் திரிபே யா என்பது. இதனாலேயே தொல்காப் பியர் யாவை வினாவெழுத்தாகக் கூறவில்லை.

ஒ.நோ: ஏன் -யான், (ஏனை) - யானை. ஏனம் = கருப்பு, பன்றி. ஏழ்-யாழ்.

ஈற்றில் வரும் ஆ வினா சேய்மைபற்றியதாகும். சேய்மையும் உயரத்திற்கினமான பண்பாதலையும், ஆன் ஒன் என்னும் இருவடிவிலும் ஆண்பாலீறு வழங்குவதையும், ஈரெழுத்தும் ஏறத்தாழ ஒரே முயற்சியால் பிறப்பதையும் நோக்கியுணர்க.

ஆவினா முதலில் வராது. ஆர் என்பது யார் என்பதன் மரூஉ.

தமிழிலுள்ள ஆ, ஈ, ஊ, ஒ, ஏ என்ற ஐந்தெழுத்துகளே, சுட்டும் வினாவும் உயரமும்பற்றிய ஆரியச்சொற்களுள் பெரும்பாலனவற்றிற்கு வேர் என்பது, இந் நூலின் மூன்றாம் மடலத்தில் விளக்கப்படும்.

சுட்டு வினாவடிகள் ஆரிய மொழிகளிற் சொற்களாயும், அவற்றுள்ளும் சில எழுத்து மாறியு மிருக்கின்றன. தமிழிலோ அவை எழுத்துக்களாயும், ஓரிடத்திலும் பிறழாமலும் இருக்

கின்றன.

கா : வடமொழியில்,