உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ்மொழித் தோற்றம்

வாழை வாழ்.

97

வாழை நீர்வள நிலத்தில் வளர்வதையும், ஒரு குடும்பம் போல மரமும் பக்கக்கன்றுகளுமா யிருப்பதையும், பெற்றோர் தள்ளாடினபின் பிள்ளைகள் தலையெடுப்பதுபோலத் தாய்வாழை முதிர்ந்தபின் பக்கக் கன்றுகள் ஓங்குவதையும், இங்ஙனம் தொடர்ந்து நிகழ்வதையும் நோக்குக.

66

வாழையடி வாழையென வந்ததிருக் கூட்டம்

இராமலிங்க அடிகள்.

60)

வாழை முதிர்ந்தபின் சாயும்.

என்றார்

சாய்-சா = இற.ஒ.நோ: Ice. deyja; Dan. do; Scot. dee. E. die.

சகர டகரங்கட்கு ஓர் இயைபிருப்பதனாலேயே, ஒடி ஒசி, vide - vise என்று திரிகின்றன.

சா + வி = சாவி (சப், வ.). சாவி + அம் = சாவம் (சாப, வ.) - சாபம். சாவிக்கிறான் என்பது இன்றும் உலக வழக்கு.

வாழ்வி x சாவி. வாழ்த்து - வழுத்து. வாழ்த்தல் சொல்லளவே.

வேர் : வேரூன்று, வேர்கொள், வேரறு.

முளை : கான்முளை; முளை = தோன்று (வி.), இளமை, துவக்கம் (பெ.)

தண்டு : தண்டு = தடி, படை (பெ.); தண்டல் = வரி திரட்டல். தண்டம் = தடி, படை, தண்டனை, தண்டனைக் கட்டணம், வீண்.

கவை:

தண்டி = பெரு, ஒரு (வி.)

தடி =

கம்பு, திரட்சி, ஊன் (பெ.); பெரு, வெட்டு (வி.) தடியாலடித்ததே முதல் தண்டனை.

கவை = பிரி (வி.). கவடு = காலிடை. கவை-கவான்- கமா (உருது).