உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




102

ஒப்பியன் மொழிநூல்

சொற்கள் இலக்கண முறையில், பெயர் வினை இடை உரி என நான் காக வகுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றுள், முதல் மூன்றே உண்மையில் சொல்வகையாகும், இறுதியது செய்யுள் வழக்குப் பற்றியதே.

உரிச்சொல் (Poetic Idiom)

உரிச்சொல் செய்யுள் வழக்குப்பற்றியதே யென்பதற்குக் காரணங்களும் சான்றுகளும்:

(1) சொற்கள் மூவகைக்கு மேற்படாமை.

பெயர்ச் சொல்லும் வினைச்சொல்லும் அவ் விரண்டையும் சார்ந்து வரும் இடை டைச்சொல்லுமென மூவகையே சொற்கள். எச்சவினை காலங்காட்டின் தெரிநிலையும், காட்டாவிடின் குறிப்புமாகும்.

ஆங்கிலத்திலுள்ள எண்வகைச் சொற்களையும்,

I. Nouns - பெயர்ச்சொல்

II. Verbs - வினைச்சொல்

III. Particles - இடைச்சொல்

என மூன்றாகவே அடக்குவர் கென்னெடி (Kennedy) என்பார்.

அரபியிலும் அதைப் பின்பற்றும் உருதுவிலும், பெயர் வினை இடை என மூன்று சொல்வகையே கூறப்படுகின்றன.

(2) "உரிச்சொற் கிளவி விரிக்குங் காலை.... பயிலா தவற்றைப் பயின்றவை சார்த்தித்

தத்தம் மரபிற் சென்றுநிலை மருங்கின் எச்சொல் லாயினும் பொருள்வேறு கிளத்தல்”

என்று தொல்காப்பியர் உரிச்சொல்லிலக்கணங் கூறல்.

(உரி. 1)

(3) தொல்காப்பியர் ஏனை மூன்று சொற்கட்கும் இலக் கணங் கூறியதுபோல, உரிச்சொற்கோர் இலக்கணம் கூறாமையுங் அகராதி முறையில் பொருளே கூறிச் செல்லுதலும்,

1

The Revised Latin Primer, pp. 12, 13