உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ்மொழித் தோற்றம்

வினாப்பெயர்

குறிப்பு

109

ஏ உயரச்சுட்டு. ஏ +ன் - ஏன் ஏ +ம் =ஏம் (தமிழில் வழக்கற்றது).

(1) முதலாவது, ஏ ஈ ஊ ஆ என்ற நெடில்களே, மூவிடப் பெயராகவும், வினாப்பெயராகவும் திணையும் பாலும் காட்டாது இடமும் எண்ணும் மட்டும் காட்டி வழங்கிவந்தன.

வடஇந்தியாவில் வழங்கும் இந்தியில் இன்றும் ஏ ஓ என்னும் தனிநெடில்கள் சுட்டுப்பெயராய் வழங்குகின்றன. அவை முறையே ஊ என்பவற்றின் திரிபாகும்.

இடையிந்தியாவில் வழங்கும் தெலுங்கில், ஆ ஈ ஏ என்னும் நெடில்கள் புறச்சுட்டுகளாய் மட்டும் உலகவழக்கில் வழங்குகின் றன; பெயர்களாய் வழங்கவில்லை.

தென்னிந்தியாவில் வழங்கும் தமிழில், அவை புறச்சுட்டா கவும் வழங்கவில்லை. அவற்றுக்குப் பதிலாய் அந்த இந்த எந்த என்ற சொற்களே வழங்குகின்றன. புறச்சுட்டாகவும் புறவினா வாகவும் அவற்றின் குறில்களே வழங்குகின்றன.

இதற்குக் காரணம் வடஇந்திய மொழிநிலை பண்படுத்தப் படாது பண்டை நிலையிலேயே யிருப்பதும், தென்னிந்திய மொழி பண்படுத்தப்பட்டு மிகுதியும் மாறியிருப்பதுமே.

புதுப்புனைவு செய்யும் ஒரு நாட்டில் கருவிகள் மாறிக் கொண்டே வரும். அது செய்யாத நாட்டில் அவை என்றும் சற்றுப் பண்டை நிலையிலேயே யிருக்கும். இந்தியாவிலுள்ள புதுப் புனைவுக் கருவிகளெல்லாம் மேனாட்டினின்றும் வந்தவை. மேனாட்டில் நாள்தோறும் புதுப்புனைவுக்கலை வளர்ந்து கொண்டேயிருப்பதால், கருவிகள் திருந்திக்கொண்டே வருகின்றன. ஆனால், இந்தியாவில், சென்ற நூற்றாண்டுகளிற் கண்டு பிடிக்கப்பட்டு, மேனாட்டில் வழக்கற்றவை யெல்லாம் காணப்படலாம். இங்ஙனமே

தென்னாட்டிலும் வடநாட்டிலும் வழங்கும் சொற்களுமென்க.