உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




120

ஒப்பியன் மொழிநூல்

உடம்பின் தொளைகள் ஒன்பதா யிருத்தலின், தொண்டு என்னும் பெயர் ஒன்பதாம் எண்ணைக் குறிக்கக் கொள்ளப் பட்டது.

தொண்டு - தொண்டி = தொளை.

ஒ.நோ: தொண்டை (throat) = தொளையுள்ளது. பஃது : பல் + து = பஃது. ஒ.நோ: அல் + து = பஃது.ஒ.நோ: +து அஃது.

பல் = பல. முதன்முதலாய்த் தமிழர்க்கு எண்ணத்தெரிந்தது பத்துவரைக்குந்தான். கைவிரல் வைத்தெண்ணியதே இதற்குக் காரணம். இருகைவிரல் பத்து. பத்து கடைசியெண்ணா யிருந்தமையின், அதைப் பலவென்னுஞ் சொல்லாலேயே குறித் திருக்கலாம். இது பல் என்னும் உறுப்புப் பெயரின் திரிபு. 12ஆம் அல்லது 13ஆம் மாதத்தில், குழந்தைக்குப் பத்துப் பல்லே யிருப்பதாக பெர்ச் (Birch) கூறுகிறார். பல் - பன் - பான்.

கா : பன்னிரண்டு, இருபான்.

முதன் முதலாய்ப் பத்துமட்டுமே எண்ணப்பட்டதினால்தான், அதற்கு மேற்பட்ட எண்களெல்லாம் பத்துப்பத்தாக எண்ணப்பட்டு, பத்தாம் பெருக்க டங்கட்கெல்லாம் கோடிவரை தனிப் பெயர்கள் இடப்பட்டுள்ளன.

முதலாவது, நூறு பத்துப்பத்தெனப்பட்டது. பதிற்றுப்பத்து என்னும் பெயர் இன்றும் நூல்வழக்கில் உள்ளமை காண்க. நூற்றுக்கு மேலெண்ணும்போது, பத்துப்பதினொன்று என்று கூறின் அது 110 என்ற எண்ணையுங் குறிக்கும். ஆகையால் நூறு என்றொரு பெயர் வேண்டியதாயிற்று. இங்ஙனமே, ஆயிரத்தைப் பத்துநூறென்று கூறினும் நூறுபத்தென்று கூறினும் இடர்ப் பாடுண்டானமையின், அதற்கும் வேறு பெயர் வேண்டிய தாயிற்று. இங்ஙனமே பிறவும்.

நாகர் கால் விரலையுஞ் சேர்த்து இருபதிருபதாய் எண்ணினதாகத் தெரிகின்றது.

எண்ணினமையின்,

லகரம் தகரத்தொடு புணரின் ஆய்தமாகத் திரிவது,

3 Management to Children in India, p.79