உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




132

ஒப்பியன் மொழிநூல்

6ஆம் வேற்றுமையுருபு எண் காட்டுவனவுங் காட்டா தனவுமாக இருவகை.

அது ஆது அ என்பவை எண் காட்டுவன. அது -ஆது.

இவை அஃறிணை வினைமுற்றீறுகளே. எழுவாய்த் தொடர் வினைமுற்றுத் தொடராக மாற்றிக் கூறப்பட்டதால் இவ் வுருபு களுண்டாயின.

கா : புத்தகம் அம்பலவாணனது

புத்தகம் - ஒருமை.

-

அம்பலவாணனது

புத்தகம் எனாது எனாது புத்தகம் - ஒருமை.

புத்தகங்கள் கண்ணன - கண்ணன புத்தகங்கள் (பன்மை).

ம்

இன் அன் என்பவை எண் காட்டாதன. இல் (7ஆம் வே. உ.) - இன் - அன். )-

கா : அதன், வேரின்.

உடைய என்பது உடைமை என்னும் பண்புப் பெயரடி யாய்ப் பிறந்த குறிப்புப் பெயரெச்சம்.

அது, இன், அன் என்னும் உருபுகள் கலந்தும்வரும். அது என்பது அத்து என இரட்டியும், து எனக் குறைந்தும் வரும்.

=

=

கா : அத்து + இன் அத்தின். இன் + அது இனது. இன் +து = இற்று. இன் + து + இன் = இற்றின். அன் + அது = அனது. அன் + து = அற்று. அன் + து + இன் = அற்றின். இங்ஙனமே பிறவும்.

7ஆம் வேற்றுமையுருபுகள் இல் முதலியன.

அவை பின்வருமாறு நால்வகைப்படும்:

(1) இடப்பெயர்

கா : இல் (வீடு).

(2) அருகிடப்பெயர் கா : முன், பின், இடம், வலம்.

(3) சினைப்பெயர் கா : கண், கால், கை, வாய், தலை.

(4) புணருருபு

கா : இடம் + அத்து = இடத்து.

இடம் + அத்து + இல் = இடத்தில்.