உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




உலக முதன்மொழிக் கொள்கை

(6)

161

அம்மை அப்பன் என்னும் தமிழ் முறைப்பெயர்கள் பல வடி வில் உலகமொழிகள் பலவற்றில் வழங்கல்.

(7) தமிழ்ச்சொற்கள் சிலவோ பலவோ உலக மொழிகள் எல்லாவற்றிலு மிருத்தல்.

(8) மும்மொழிக் குலங்களின் சிறப்பியல்பும் ஒருசிறிது தமிழிற் காணப்படல்.

வடமொழிக்குரிய நீட்டற்புணர்ச்சி (தீர்க்கசந்தி) தமிழிலுள்ளமை முன்னர்க் கூறப்பட்டது.

சித்தியக் குலத்திற்குச் சிறந்த உயிரொப்புத் திரிபு (Harmonious Sequence of Vowels) பொதியில் (பொது + இல்), சிறியிலை (சிறு + இலை) முதலிய தொடர்மொழிகளில் உளது.

சீனத்தில் ஒரே சொல் இடவேற்றுமையால் வெவ்வேறு சொல் வகையாகும். தமிழிலும் இஃதுண்டு.

கா : பொன் (அழகிது) - பெயர்ச்சொல். (அது) பொன் வினைச்சொல். பொன் (வளையல்) - பெயரெச்சம். பொன் (விளைந்த களத்தூர்) - வினையெச்சம்.

பிறமொழிகளில் உள்ள ஒருமை இருமை பன்மை என்னும் எண்பாகுபாட்டிற்கு, அவன் அவர் அவர்கள், அல்லது ஒரு சில பல என்னும் வழக்குகள் மூலமாயிருக்கலாம்.

(9) தமிழில் ஒலிக்குறிப்பாயுங் குறிப்பொலியாயு முள்ளவை பிறமொழிகளில் சொல்லாய் வழங்கல்.

கா : தரதர - tear, தகதக - தஹ் (வ.), உசு hush, சளப்பு saliva, கெக்கக் கெக்க - L. cachinno, v. E. cachinnation.

(10) அயன்மொழிச் சொற்கள் பலவற்றிற்கு வேர் தமிழி லிருத்தல்.

முக்குல மொழிகளிலுமுள்ள சுட்டு வினாச்சொற்களின் அடிகள் தமிழிலிருப்பது முக்கியமாகக் கவனிக்கத்தக்கது.

(11) எழுகிழமைப் பெயர்களும் பன்னீரோரைப் பெயர்களும், ஆரிய மொழிகளில் தமிழ்ச்சொற்களின் மொழிபெயர்ப் பாயிருத்தல்.