உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




166

ஒப்பியன் மொழிநூல்

(4) அகம் = அவ்விடம், அவ்வுலகம், வீடு, உள், உள்ளம், (நான்). ஒ.நோ: இகம் = இவ்விடம், இவ்வுலகம், இகபரம் என்னும் வழக்கை நோக்குக. வீடு = துறக்கம், இல்லம். இல் = வீடு, உள். உள் = உட்புறம், மனம். உள் + அம் = உள்ளம் - உளம். உள்ளம் என்று பொருள்படும் அகம் என்னும் தமிழ்ச்சொல்லையே, நான் என்னும் பொருளில் வழங்கினர் வடமொழியாரியர். ஆன்மா என்னுஞ் சொல்லை, ஆத்மனேபத, ஆத்மநிவேதனம் முதலிய தொடர்களில் தன்னைக் குறிக்க வழங்குதல் காண்க. அகம் x புறம்.

மேலையாரிய மொழிகளில் முதலாவது தன்மையொருமைப் பெயராக வழங்கியது me என்பது. min, me, mec முதலிய வேற்றுமை பெற்ற பெயர்கள் me என்பதினின்று தோன்றுமேயொழிய அகம் என்பதினின்று தோன்றா."go என்னும் வினையின் இறந்தகால வடிவம் வழக்கற்று, அதற்குப் பதிலாக wend என்பதின் இறந்தகால வடிவமாகிய went என்பது வழங்குவது போன்றது அகம் என்பது.

2

று

(5) sta என்னும் சொல் esta என்று மேலையாரியத்தில் வழங்குவது, பண்டைக்காலத்தில் மேனாட்டாரும் இஸ்கூல் (School) என்று சொல்லும் தமிழர் நிலையிலிருந்தனர் என்பதைக் காட்டும். தாவு இடம். தாக்கு = நிலை. தாக்குப் பிடித்தல் என்னும் வழக்கு நோக்குக.

புரி, புரம் என்னும் நகர்ப்பெயர்கள் ஆரிய மொழிகளிலெல் லாம் வழங்குவதும், தொல்லாரியர்க்கும் தமிழர்க்குமிருந்த தொடர்பைக் காட்டும்.

=

=

புரிதல் = வளைதல். L. spira, Gk. speira, E. spire. புரி = வளைந்த அல்லது திருகிய இழை. ஒ.நோ: thread, from thrawan (திரி), to twist. புரிதல் மனத்திற் பதிதல், விளங்குதல். L. prehendo புரிகொள். E. prehend - apprehend, comprehend etc. புரி - புரீ(வ.) = வளைந்த மதில், கோட்டை, மதிலாற் சூழப்பட்ட நகர். ஒ.நோ: கோடு + ஐ = கோட்டை. கோடு + அம் = கோட்டம் koshta (Skt.) = மதில் சூழ்ந்த

கோயில்.

வடமொழியிற் கோஷ்ட என்பதை, கோ (பசு) என்பதி னின்று பிறந்ததாகக் கூறுவது பொருந்தாது. அது தொழுவம் என் று 2 Historical Outlines of English Accidence, p. 177