உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




உலக முதன்மொழிக் கொள்கை

169

இந்துஸ்தானியில் 48. இத் தொகைகள் மாக்கசு முல்லர் கூறியன. இவற்றுள் ஒன்றிரண்டு கூடினும் குறையினும் இவற்றைக் கூறியதின் பயன் மாறாதிருத்தல் காண்க.

ழி

இங்குக் கூறியவற்றால், வடமொழி உலக முதன்மொ யாவதினும், ஒட்டகம் ஊசியின் காதில் நுழைவது எளிதாயிருக்கு மென்க.

திராவிடம் சிறிய குடும்பமேயாயினும், பல காரணம்பற்றித் தனித்துக் கூறப்படற் கேற்றதாகும்.

முடிவு

தமிழே உலக முதல் இலக்கியமொழி. இதன்பெருமை சென்ற 2000 ஆண்டுகளாக மறைபட்டுக்கிடந்து, இன்று மொழிநூற் கலையால் வெள்ளிடைமலையாய் விளங்குகின்றது. பண்டைத் தமிழர்க்கும், இற்றைத் தமிழர்க்கும் எல்லாத் துறைகளிலும் ஆனைக்கும் பூனைக்கும் உள்ள வேறுபாடாகும்.

தமிழை முன்னோர் செந்தமிழாகவும் தனித்தமிழாகவுமே வளர்த்தனர். அங்ஙனமே இனிமேலும் வளர்க்க வேண்டும். வளர்ப்பு முறை தமிழுக்கும் பிறமொழிகட்கும் வேறுபட்டதாகும். பிறமொழிகளில் கொடுவழக்குகளெல்லாம் செவ்வழக்காகும்; தமிழிலோ கொடுவழக்குகள் கொள்ளப்படாது. கொள்ளப்படும்.

என்றும் செந்தமிழே

கா : ஆங்கிலத்தில் r, 1 சில சொற்களில் ஒலிக்கப்படா விட்டாலும் குற்றமில்லை; தமிழிலோ அவர்கள் என்பதை அவக என்றொலித்தால் குற்றமாம். இந்தியில் சொல்லீற்று னகர மெய் அரைமெய்யா யொலிப்பது குற்றமன்று; தமிழில் அங்ஙனம் ஒலிப்பது குற்றம். தெலுங்கில் பப்பு என்பது குற்றமன்று; தமிழிலோ குற்றம். இங்ஙனமே பிறவும் பற்பல வழக்குகள் தமிழ்நாட்டில் வழங்கினாலும், செந்தமிழையே அளவையாகக் கொண்டதினாலேயே தமிழ் இதுநாள் வரைக்கும் பெரும்பாலும் திரியாது வந்திருக்கின்றது.

தமிழ் கடன்சொற்களால் தளர்ந்ததன்றி வளர்ந்ததன்று. கடன்கோடலால் ஓர் ஏழைக்கு நன்மை; ஆனால் செல்வனுக்கோ