உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பண்டைத் தமிழகம்

குட்டன்

அஃறிணைப் பெயரும் அன் ஈறு பெறும். கா ஆட்டுக்குட்டி. குட்டான் = சிறுபெட்டி, சிறு படப்பு. அம் + குட்டன் : அங்குட்டன். இது வடமொழியில் அங்குஷ்டன் எனப்படும்.

.

LO

=

||

=

அகத்தியர் பெயரான அங்குட்டன் என்பதையும், பெரு விரலின் பெயரான அங்குட்டன் என்பதையும், ஒன்றாய் மயக்கி, அகத்தியர் அங்குட்ட (பெருவிரல்) அளவினர் என்று பழைமையர் கூற நேர்ந்திருக்கலாம்.

(5) மாநிலத்தைச் சமனாக்கியது

பனிமலை ஒருகாலத்தில் நீர்க்கீழிருந்து பின்பு வெளித் தோன்றியது. அகத்தியர் தெற்கே வந்தபின், குமரிநாட்டைக் கடல்கொண்டது. முற்காலத்தில் முறையே தாழ்ந்தும் உயர்ந்து மிருந்த வடதென்நிலப்பாகங்கள், பிற்காலத்தில் உயர்ந்தும் தாழ்ந்தும் போயின. இவ் விரண்டையும் இணைத்து, அகத்தியர் தாழ்ந்தும் உயர்ந்துமிருந்த வடதென் நிலப்பாகங்களைச் சமப்படுத்தினரென்றும், வடபாகம் அமிழ்ந்ததற்குக் காரணம் நிலத்திற்குப் பாரமாகுமாறு பதினெண் கணத்தவர் வந்து கூடிய சிவபெருமான் கலியாணமென்றும் கதைகட்டினர் பழைமையர். (6) தமிழை உண்டாக்கினது

நூல்களுள்

அகத்தியம்

தமிழ் மிகப் பழைமையானதாதலாலும், பிற்காலத் தமிழர்க்குச் சரித்திரவறிவின்மையாலும். இதுபோது அறியப்படுகின்ற தமிழ் முன்னதாதலாலும், அகத்தியர் தலைக்கழகத்திறுதியில் வந்தவராதலாலும் அகத்தியர் தமிழை உண்டாக்கினர் என்று சிலர் கருதலாயினர்.

அகத்தியம் வழிநூலாதல்

அகத்தியம் தமிழிலக்கண முதனூலென்று, துவரையும் கூறப்பட்டுவந்தது. இற்றையாராய்ச்சியால் அது வழிநூலே யென்பது தெள்ளத்தெளியத் தெரிகின்றது.

அகத்தியம் வழிநூல் என்பதற்குக் காரணங்கள்

(1) தொல்காப்பியத்தில் ஒரிடத்தும் அகத்தியம் கூறவும் சுட்டவும்

படாமை.