உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பண்டைத் தமிழகம்

7

பாணினி கி.மு. 5ஆம் நூற்றாண்டினரா யிருக்க, அவரியற் றிய இலக்கணம் எங்ஙனம் இராமர் காலத்தவரான அகத்தியர் நூலுக்கு முதனூலாதல் செல்லும்?

ம்

ஐந்திரம் என்பது இந்திரன் என்றோர் (ஆரியப்) புலவர் இயற்றிய இலக்கணமாகும். அகத்தியர்க்கு முன்னமே ஒருசில ஆரியர் தென்னாட்டிற்கு வந்திருந்தமை, 'அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும்' என்று தொல்காப்பியர் கூறுவதாலும், கந்தபுராணத்தாலும், திருமாலின் முதலைந்து தோற்றரவுச் செய்திகளாலு மறியப்படும்.

ஐந்திரம் என்பது வடமொழி யிலக்கணமா தென்மொழி யிலக்கணமா என்று திட்டமாய்க் கூற இயலவில்லை. ஆயினும், இந்திரன் ஐந்திரம் என்னும் திரிபாகுபெயர் (தத்திதாந்த) முறையினாலும், ஐந்திரத்தினும் வேறாக "முந்துநூல் கண்டு" எனச் பனம்பாரனார் குறித்தலாலும் அது வடமொழி யிலக்கணமே யெனக் கொள்ள இடமுண்டு ஆதலால்,

சில

நூல்களைப்

"புண்ணிய சரவணம் பொருந்துவி ராயின் விண்ணவர் கோமான் விழுநூ லெய்துவீர்”

“கப்பத் திந்திரன் காட்டிய நூலின்

மெய்ப்பாட் டியற்கை விளக்கங் காணாய்

(சிலப்.11:98-9)

(சிலப். 15: 4 -5)

என்று சிலப்பதிகாரத்தில், நாடுகாண் காதையிற் கூறினது மென்க.

66

கூ

“ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்” என்று தொல்காப் பியர் சிறப்பிக்கப்படுவதால், ஐந்திரம் மிக விழுமிய நூலென்பது பெறப்படும். இந்திரன் மருதநிலத்துப் பண்டைத் தமிழ்த் தெய்வமாதலின், ஐந்திரம் அதன் சிறப்புப்பற்றியும் நூலாசிரியன் பெயரொப்புமைபற்றியும் அத் தெய்வத்தினதாகக் கூறப்பட்டது. இறையனார் அகப்பொருள் அதன் நூலாசிரியன் பெய ரொப்புமைபற்றியும், கோயிற் பீடத்தடியிற் கிடந்தமைபற்றியும், சிவபெருமா னியற்றியதாகக் கருதப்பட்டமை காண்க. இந்திரனுக் குப் பண்டைத் தமிழ்ப்பெயர் வேந்தன் என்பது. இந்திர தெய்வத்திற்குப் பண்டைத் தமிழ்நாட்டிலிருந்த பெருமையைச் சிலப்பதிகாரத்தானும் மணிமேகலையானு முணர்க.