உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பண்டைத் தமிழகம்

31

வடசொற்கள் மிகத் தாராளமாய் வழங்குகின்றன. ஒரு செய்யுள் பெரும்பாலும் வடசொற்களா யிருந்தால், மிகவுயர்ந்த தெலுங்காக மதிக்கப்படுகின்றது.

தெலுங்கு வடிவாகப் பல தென்சொற்கள் மேலையாரிய மொழிகளிலும் வழங்குகின்றன.

கா : தமிழ் விளி

தெலுங்கு

ஆரியம்

பிலு(ச்)சு

L. pello

E. appeal, repeal etc.

அள் (காது) அடுகு

L. audio

E. audience, audible etc.

வரை

விராசு

E. write, A.S. writan

சால்

சாலு

L. satis, E. satisfy.

வண்டி,

பண்டி

பண்டி

வெள்ளு

E. wend, to go.

E. bandy

Ger. wenden, A.S. wendan,

கேள் என்னும் சொல், வினவு என்னும் பொருளில் தமிழில் வழங்குவதுபோல, அடுகு என்னும் சொல் தெலுங்கில் வழங்குகின்ற தென்க. Write என்னும் சொல்லில் (வ்) பண்டு ஒலித்தது.

(v) தெலுங்கிற்கு வடக்கில் ஆரியமொழி வழங்கல்

பண்டைக் காலத்தில், தமிழ், தெலுங்கு, கன்னடம், மராட்டி, குஜராத்தி என்னும் ஐந்தையும், ஆரியரே பஞ்ச த்ராவிடீ என்று அழைத்தனர். கால்டுவெல் ஐயர் இத்தொகுப்பை ஒப்புக் கொள்ளவில்லை. ஆயினும், இத்தொகுப்பு சரியானதே யென்பது, இம்மடலத்தின் 2ஆம் பாகத்தில் விளக்கப்படும்.

(vi) வட இந்தியாவில் திராவிட மறைவு

கோண்டி (Gondi), பத்ரீ(Bhatri), மால்ற்றோ (Malto), போய் (Bhoi) முதலிய திராவிட மொழிகள், மெள்ள மெள்ள ஆரிய மயமாவதை அல்லது மறைந்துபோவதைப் பண்டிதர் கிரையர்சன் 1906ஆம் ஆண்டே தமது 'இந்திய மொழிக் கணக்கீடு' என்னும் நூலிற் குறித்துள்ளார்.5

5 L.S.I. Vol. IV, pp.446, 472-4