உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




48

ஒப்பியன் மொழிநூல்

ஆகவே, வாரணன் என்னும் பெயரே வருணன் என்று வடமொழியில் திரிக்கப்பட்டதென்க.

பாலைநிலத் தெய்வம் கொற்றவை

=

பாலைநிலம் முதுவேனிற்காலத்தால் தோன்றுவது.

கொற்றம் + அவ்வை = கொற்றவ்வை - கொற்றவை. கொற்றம் வெற்றி. அவ்வை அம்மை என்பதன் போலி, பிற்காலத்தில் பாட்டியைக் குறித்தது.

பாலைநில மாந்தராகிய கள்ளர் மறவருக்கு, அவரது போர்த் தொழிலில் கொற்றத்தைத் தருபவள் கொற்றவை.

கொற்றவைக்கு அம்மை, மாயோள், காளி, அங்காளம்மை, மாரி, பிடாரி, கன்னி, குமரி, பகவதி முதலிய பிற பெயர்களுமுண்டு.

அம்மை

=

தாய், பெண்தெய்வம். முதுவேனிற்காலத்தில் வெப்பத்தினால் தோன்றும் வைசூரிநோய், அம்மையால் தோன்றுவதாகக் கருதப்பட்டு அம்மை எனப்பட்டது. அக்காலத்தில் தழைக்கும் வேப்பிலையும் அம்மைக்குகந்ததாகக் கொள்ளப்பட்டது.

அம்மை (அம்ம) என்பதின் திரிபே அம்மன், அம்பா (வ.)

என்பவை.

மாயோள் = கரியள். மாமை கருமை.

கள் காளம் -காளி. கள் - கருப்பு, கள்ளம், களங்கம், காளான் (black mushroom) முதலிய சொற்கள் கருப்பு என்னும் மூலப்பொருளைக் கொண்டவை.

காளி வணக்கம் முற்காலத்தில் தமிழகத்தில் மிகச் சிறந் திருந்தது. வங்காளத்தில் உள்ள காளிக்கோட்டம் என்னும் இடப்பெயர் இன்று காளிக்கட்டம் - Calcutta - கல்கத்தா என்று திரிந்து வழங்குகின்றது. கோட்டம் = அரண், கோயில். கோடு + அம் = கோட்டம். கோடுதல் வளைதல். கோடிய (வளைந்த) மதிலாற் சூழப்பெற்றது கோட்டம் (தொழிலாகுபெயர்). கோடு +ஐ = கோட்டை. தமிழர் அல்லது திராவிடர் பண்டு வடஇந்தியா வரை பரவியிருந்தனர் என்பதற்குக் காளிக்கோட்டமும் ஒரு சான்றாம்.

காளி கூளி (பேய்)களின் தலைவி. பேயைக் கருப்பென்றும் இருளென்றும் கூறுவது உலக வழக்கு.