உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




54

பேய்களைத் தெய்வம் என்பது, தொன்றுதொட்டு இன்றுவரை யுள்ளது.

(4) நடுகல் தெய்வம்

“காட்சி கல்கோள் நீர்ப்படை நடுகல்

ஒப்பியன் மொழிநூல்

ருவகை வழக்கிலும்

""

சீர்த்தரு மரபிற் பெரும்படை வாழ்த்தல்

(புறத்.5)

என்பது தொல்காப்பியம்.

மதுரைவீரன், மாடசாமி, கருப்பசாமி முதலியவை நடுகல்

தெய்வங்களே.

(5) கற்புத் தெய்வம்

கண்ணகி வரலாறு காண்க.

(6) தென்புலத்தார் வணக்கம்

(Ancestor Worship)

பண்டைத் தமிழர், இறந்துபோன தம் முன்னோரைத் தென் புலத்தார் என்று பெயரிட்டுச் சமையம் வாய்க்கும்போதெல்லாம் வணங்கி வந்தனர். இது முன்னோரை து நினைவுகூர்வது ம் பெரியோர்க்குச் செய்யும் மதிப்புமாகும். இது சீனநாட்டில் மிகுதியாக வுள்ளது.

"தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங் கைம்புலத்தா றோம்பல் தலை

என்றார் திருவள்ளுவர்.

(7) நிலா வணக்கம்

(குறள்.43)

நிலாவும் ஒரு காலத்தில் வணங்கப்பட்டதைப் ‘பிறைதொழு கென்றல்' என்னுங் கோவைத்துறையா லறியலாம்.

நால்வேள்வி

வேள் + வி = வேள்வி. வேட்டல் விரும்பல். விருப்பத்தோடு பிறரை யுண்பிப்பது வேள்வி.

"இணைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின் றுணைத்துணை வேள்விப் பயன்

""

(குறள். 87)

என்னுங் குறளில், விருந்தைத் திருவள்ளுவர் வேள்வியென்றமை காண்க.