உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பண்டைத் தமிழகம்

67

பண்டைக்காலத்தில் ஒவ்வோர் அரசனிடத்தும், ஒவ்வொரு கருமான் அல்லது தச்சன் இருந்தான். அவனே ஊர்களை அல்லது நகர்களைக் கட்டுபவனாதலின், 'உலகக் கருமான்' (விசுவகர்மா) எனப்பட்டான். உலக விடைகழி' என்பதில் உலகம் நகரைக் குறித்தலையும், கருமான் என்பது கொல்லன் பெயராதலையுங் காண்க. விசுவகர்மா என்பது உலகக் கருமான் என்பதின் மொழிபெயர்ப்பே.

உலகக் கருமானுக்கு அரசத் தச்சன் என்றும் பெயருண்டு. ஒ.நோ: Gk. architekton - archi, chief, and tekton, a builder, E. architect.

ஊரைக் கட்டுவது தச்சனாதலாலும், கொல்லருக்குள் கருமான், தச்சன், கற்றச்சன், கன்னான், பொற்கொல்லன் என ஐம்பிரிவிருப்பதாலும். உலகத்தைப் படைத்தவன் முதற் கருமான் என்றும், அவன் ஐம்முகன் என்றும் ஒரு பழைமை வழக்கு தொன்றுதொட்டுக் கம்மாளர்க்குள் வழங்கி வந்திருக்கின்றது.

பிராமணர் தம் குலமுதல்வராகிய பிரமனைப் படைப்புத் தெய்வமென்றும் நான்முகனென்றும் கூறியபோது, கம்மாளர்க்கு அவர்மீது பகையுண்டானதாகத் தெரிகின்றது. அதுவே இன்றும் தொடர்ந்து வருகின்றது. ஆரிய மறையை நான்காகப் பகுத்தது பிற்காலமாதலின், பிரமாவை நான்முகன் என்றது திசைபற்றி அல்லது குலப்பிரிவுபற்றியே யிருத்தல் வேண்டும்.

அறுமுறை வாழ்த்து

பாடாண்பொருள் புகழ்ச்சி, வாழ்த்து, வழுத்து மூவகைப்படும். புகழ்ச்சியாவது ஒருவரைச் சிறப்பித்துக் கூறல்; வாழ்த்தாவது ஒருவரை நீடு வாழ்கவென்றல்; வழுத்தாவது ஒரு தெய்வத்தைப் பராவுதல்.

66

'அமரர்கண் முடியும் அறுவகை யானும்' (புறத். 21) என்பதால், வாழ்த்தப்படுபொருள் ஆறென்றார் தொல்காப்பியர். அவை முனிவரும் பார்ப்பாரும் ஆனிரையும் மழையும் முடியுடை வேந்தரும் உலகுமாம்” என்று கூறினர் நச்சினார்க்கினியர். இவற்றுள், பார்ப்பார் முற்காலத்துக் கேற்காமையின், அவர்க்குப் பதிலாய்க் கூறத் தக்கது அறமேயாகும்.

"கொடிநிலை கந்தழி வள்ளி யென்ற வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே'

என்பது தொல்காப்பிய நூற்பா.

(புறத்.27)