உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பண்டைத் தமிழகம்

69

அறிவ (சித்த) மதம்

'அறிவன் தேயம்' என்று தொல்காப்பியத்திற் கூறியிருப் பதால், உருவ வணக்கத்தை(Idolatry) யொழித்த உயர்ந்த அறிவமதமும் பண்டைத் தமிழகத்திலிருந்தமை யுணரப்படும். பிற்காலத்தி லிருந்த தமிழரே. கடவுள் என்ற பெயர்

பதினெண்ணறிவரும்

எல்லாவற்றையுங் கடந்த முழுமுதற்கடவுளைக் குறித்தல் காண்க.

வடமொழிப் பழைமை நூற்பொருள்கள் பல தென்னாட்டுச் செய்திகளேயாதல்

சதாபத பிராமணம், பாரதம், பாகவதம், அக்கினி புராணம், மச்ச புராணம் என்பவை தென்னாட்டுக் கடல்கோட் செய்தியைக் கூறுகின்றன.

திருமாலின் ஆமைத் திருவிறக்கம்

"பாண்டிநாட்டைச் சூழ்ந்த கடல்களில், மிகப் பெரிய ஆமைகள் வாழ்கின்றன. அவற்றின் ஓடுகள் வீடுகளுக்கு முகடு போட உதவுகின்றன. ஓர் ஓட்டின் நீளம் 15 முழம். அதனடியில் பலர் நின்று வெயிலுக்குத் தப்பமுடியும்” என்று மெகஸ்தனிஸ் கூறுகிறார்.15 இது முன்னோர் கூற்றைக் கொண்டு கூறியதே.

தென்கடலில் நிலநடுக்கத்தால் தத்தளித்த ஒரு மலைத் தீவையே, ஆமையுடன் இணைத்து, திருப்பாற்கடல் கடைந்த கதையைக் கட்டியிருப்பதாகத் தெரிகின்றது. இராமாயணத்தில் முக்கியமான பகுதி தென்னாட்டுச் செய்தியே.

தெய்வமாக்கிக் கூறியவர், சிறந்த அல்லது பெரிய அரசரைத் தெய்வ வால்மீகியைவிடக் கம்பரே இராமனை மிகுதியுமாக வணங்குவது பண்டை வழக்கம். திருமலை நாய்க்கர் இறந்தபின்பு அவர்க்குக் கோயில் எடுத்து வழிபட்டனர்." திருமாலைப்போல அரசரும் காப்புத் தொழிலையுடைமையின், அவரைத் திருமாலாகக் கூறுவது தொல்காப்பியர் காலத்திலேயே வழக்கம் என்பதை, 'பூவை நிலை' என்பதாலறியலாம். 'முச்சக்கரமும்' என்னும் வெண்பா கரிகாலனைத் திருமாலாகக் கூறுவதையும், அரசர்

15 Foreign Notices of South India, p. 42 16 History of the Nayaks of Madura, p. 146