உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பண்டைத் தமிழகம் மரன்

ஹா

நி

நொ

நெ நொ

முரண் (பெரிய) ஆம்

இன் (இந்த) அன் (அந்த)

75

தமிழில், சொற்களின் ஈற்றில் மெய்கள் அரையொலிப்பா யொலித்தல் கொச்சை வழக்கு.

இன் என் னுஞ் சொல், இலக்கணப் போலியாய் எழுத்து முறைமாறி நி என்றாகும். அகர இகரங்கள் முறையே ஒகர எகரங்கட் கினம்.

குரங்கு, கொண்டை, பரவு (படவு), இரும் (கருப்பு), பெட்டி, மூக்க (முகம்), ஏகு, பொஹொ (புகை) முதலிய பல தமிழ்ச் சொற்கள் மலேயத் தீவுக்கூட்டத்தில் வழங்குகின்றன.

கீழ்வருபவை முண்டா மொழியினத்தின் சிறப்பியல்பு களாகப் பண்டிதர் கிரையர்சன் குறிப்பிடுகின்றார்:

(1) ஒரே சொல் பல சொல்வகை (Parts of Speech)யாக வழங்கல்.

(2) ஆண் பெண் என்ற சொற்கள் பெயரோடு சேர்ந்து முறையே ஆண்பாலும் பெண்பாலு முணர்த்தல்.

(3) 6ஆம் வேற்றுமை பெயரெச்சமா யிருத்தல்.

ரு

(4) முன்னிலையை உளப்படுத்துவதும் படுத்தாததுமான இரு தன்மைப்பன்மைப் பெயர்களிருத்தல்.

(5) இருந்து என்று பொருள்படும் (5ஆம் வேற்றுமை) உருபு ஒப்புப்பொருளை யுணர்த்தல்.

(6) தொடர்பு பதிற்பெயர்களும் (Relative Pronouns) தொடர்பு வினையெச்சங்களும் இல்லாமை.

இவை தமிழுக்கும் உரியவாதல் காண்க.

மான்குமேர் மொழியினம் ஒரசை (Monosyllabic)நிலை யதாகவும், முண்டா மொழியினம் பல்லசை(Polysyllabic)நிலை யதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் முன்னதன் முன்மை யுணரப்படும்.