உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




‘உல்' (உ) என்னும் வேர்ச்சொல்

ஓடு

77

ஒடி.ஒடிதல் = முறிதல். ஒடித்துக் கேட்டல் = விலையைக் குறைத்துக் கேட்டல்.

ஒடி- ஒசி (மேற்காண்க). ஒ. நோ: குடவன்- குசவன், பிடி- பிசி (பொய்).

வழக்கு.

பொய் சொல்லுதலைப் பொய் பிடித்தல் என்பது சேலம் வட்டார

ஒடுங்கு-அடங்கு - அடக்கு- அடக்கம். அடங்குதல் = சுருங்குதல், உள்ளமைதல், உட்படுதல், கீழ்ப்படிதல், புலனொடுங்குதல், உறங்குதல், சாதல். ஒடுங்கு -ஒதுங்கு-ஒதுக்கு - ஒதுக்கம்.

சாதல்.

ஒதுங்குதல் = 1. ஒடுங்குதல். 2. விலகுதல். 3. வறுமையடைதல். 4.

ஒதுங்கு- அதுங்கு - அதுக்கு - அதுக்கம்.

அதுங்குதல் = உள்ளொடுங்குதல், கலம் நெளிதல்.

அதுக்குதல் = வாயிலடக்குதல், அமுக்குதல்.

அதுக்கு =ஒடுக்கு, கலநெளிவு.

=

ஒதுங்கு - ஒருங்கு. ஒருங்குதல் = 1. ஒடுங்குதல். "உரமொருங் 1.ஒடுங்குதல்."உரமொருங் கியது.... வாலியது மார்பு” (கம்பரா. யுத்த. மந்திர. 90). 2. அழிதல்.

"நமரெல்லாரும் ஒருங்கினர் சமரில்"

ஒ. நோ : விதை- விரை.

(பிரபோத, 38:1)

ஒருங்கு - ஒருக்கு. ஒருக்குதல் = 1. அடக்குதல். “மனத்தை யொருக்கு மொருக்கத்தி னுள்ளே” (பதினொ. திருவிடைமும். 24). 2. அழித்தல். 'இன்றொருக்கினே னித்தனை வீரரை” (கம்பரா. பிரமா. 195).

இனி, ஒடுங்கு - ஒருங்கு என்றுமாம்.

ஒ.நோ: அடுப்பங்கடை- அடுப்பங்கரை, படவர்- பரவர்.

ஒன்று சேர்தலைக் குறிக்கும் ஒருங்கு என்னும் சொல்லும், ஒடுங்குதலைக் குறிக்கும் ஒருங்கு என்னும் சொல்லும், வெவ்வேறாம். ஒன்றுசேர்தற் கருத்திற் சாதற்கருத்திற் கிடமின்மை காண்க.

ஒல்கு - அல்கு. அல்குதல் = 1. சுருங்குதல். 2. அழிதல். “அளியினாற் றொழுவார்வினை யல்குமே” (தேவா. 168 : 10). 3. தங்குதல் (பிங்.).