உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




‘ஊது ’ என்னும் ஒலிக்குறிப்புச் சொல்

ஊது

-

91

பூது - பூத்து. பூத்துப் பூத்தென்று அடுப்பூதிக் கொண் டிருக்கின்றான் என்பது உலக வழக்கு.

ஊது - ஓது. ஓதுதல் = 1. காதிற்குள் ஊதுவதுபோல், சமயகுரவன் அருமறை மந்திரத்தைச் சமைந்த மாணவனுக்குச் சொல்லுதல்.

2. மருமச் செய்தியை ஒருவன் இன்னொருவன் காதிற்குள் மெல்லச் சொல்லுதல்.