உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முகவுரை

உத்தல்

=

பொருந்துதல். உந்தி

=

xi

பொருத்தம், சேர்க்கை,

விளையாட்டில் இருவர் சேரும் இணை, நுண்மதியொடு பொருந்தும் நிலைமை, நூலமைப்பிற்குப் பொருத்தமான நெறிமுறை.

உ-ஒ. ஒத்தல் - பொருந்துதல், இணைதல். ஒக்கல் அரத்தவுறவுள்ள இனம், சுற்றம்.

உ-உல் - ஒல். ஒல்லுதல் - பொருந்துதல்.

உல் - உர்-உறு. உறுதல் = பொருந்துதல்.

உர்

-

=

ஊர் = கூட்டம், மக்கள் நிலையாகக் கூடிவாழும்

மருதநிலக் குடியிருப்பு, குடியிருப்பு.

இங்ஙனம் வேர்ச்சொற்கு முளையும் விதையும் வேறெம்மொழியிலுங் காணவியலாது.

இனிவேரும் ஆணிவேர், பக்கவேர், கிளைவேர், சிறுகிளை வேர் எனப் பலதிறப்படும்.

குல் என்பது ஒர் ஆணிவேர், அதினின்று குலம், குலவு குலாவு, குலை முதலிய சொற்கள் பிறக்கும். இவை ஒருவகைப் பொருட்கூட்டம் பற்றியன.

கல் என்பது குல் என்பதினின்று திரிந்த பக்கவேர்.

அதினின்று கல, கலப்பு, கலப்படம், கலவை, கலம்பு, கலம்பகம், கலம்பம் (கதம்பம்) - கலவு, கலவன், கலசு முதலிய சொற்கள் பிறக்கும். இவை பல்வகைப் பொருட்கூட்டம் பற்றியன. கல என்னும் சொல்லனின்று புணர்ச்சியும், கலகமும், கலக்கமும் பற்றி முக்கிளைகள் பிரியும்.

(கல் -) கல

(புணர்ச்சி)

(கலகம்)

(கலக்கம்)

கலவி

கலவு கலாவு

கலங்கு கலுழம் -கலுடம்

கலகு கலாவம்

கலங்கல் கலுழ்வு

கலகி

கலாபம்

கலகம் கலாபி

கலக்கு கலுழ்ச்சி

கலக்கம் கலுழி