உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




‘ஓல்' என்னும் வேர்ச்சொல்

103

அட்டு என்னும் திரிபும் அதன் மூலமான ஒட்டு என்பது போன்றே (அதே பொருளில்) துணைவினையாம். ஆயின், இது முன்னிலை யிடத்திற்குரிய உடன்பாட்டு ஏவல் வினையாகவே வரும். ஒட்டு என்பதோ மூவிடத்தும் பெரும்பான்மை எதிர்மறை யிலும் சிறுபான்மை உடன்பாட்டிலும் வரும்.

டு : அவன் வரட்டு = அவனை வரவிடு (ஒருமை)

அவன் வரட்டும் = அவனை வரவிடும். (பன்மை)

அவன் வரவொட்டேன்

அவன் வரவொட்டோம்

அவன் வரவொட்டாய்

தன்மை

அவன் வரவொட்டீர்

முன்னிலை

அவன் வரவொட்டான்

அவன் வரவொட்டார்

படர்க்கை

அவன் வரவொட்டுவேன், அவன் வரவொட்டுவோம் என்பன உடன்பாடு.

ஒ ஒ .ஒ .நோ : நல் - ந. பொல்- பொ. ந = நல்ல.

எ - டு : நக்கீரன். பொத்தல் = துளைத்தல்.

ஒத்தல் = போலுதல், பொருந்துதல். ம.ஒ.

ஒ -ஒக்க =ஒருசேல, போல, ம.ஒக்க.

ஒக்கல் = இனம், இனத்தார்.

ஒக்கல்-ஒக்கலி. ஒக்கலித்தால் = இனத்தாருடன் உறவாடுதல்.

ஒக்கல = பொருந்திய பக்கம், மருங்குல், இடுப்பு.

ஒக்கல்- ஒக்கலை = இடுப்பு.

ஒக்க (தெ.) =ஒரு.

+

ஒக்க + இடு = ஒக்கிடு.

ஒ- ஒத்து (வி.எ.)- ஒத்துக்கொள், ஒத்துக்கொடு.

ஒ - ஒத்து - ஒத்தாசை.

ஒ - ஒத்து - ஒத்திகை = ஒத்துப்பார்க்கும் நாடகப் பயிற்சி, ஒத்திகை - ஒத்திக்கை.

ஒ- ஒப்பு-ஒப்பனை = உவமை, சமம், அழகு.

ஒப்பு - ஒப்பம் .ம.ஒப்பம்,க.ஒப்ப.