உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




106

வேர்ச்சொற் கட்டுரைகள்

-

ஓல் ஓலம் = 1. ஓசை (பிங்.). 2. என்றும் ஓசையிடும் கடல்.

3. அடைக்கலம் வேண்டும் கூக்குரற்சொல். 'ஞானநா யகனே ஓலம்” (கந்தபு. சூர. வதை. 460).

Te. ola, M. olam.

ஓலோலம் - ஆலோலம் =ஓவெனக் கத்திப் பறவைகளைத்துரத்தும் குறிப்புச் சொல்.

"பூவைகாள் செங்கட் புள்ளினங்காள் ஆலோலம்”

(கந்தபு. வள்ளி, 51)

லக்

லேலோ எனப் பாடிக் குழவியைத் தூங்கவைத்தல், கணஞ்சாரா உலக வழக்கில் லோலாட்டு எனப்படும்.

லோலாட்டு- ஓலாட்டு = தாலாட்டு.

ஓல் = தாலாட்டு.

“ஓலுட னாட்டப் பாலுடனுண்டு

(இறை. 2, உரை)

ஒ.நோ:ரோரோ- ரோராட்டு- ராராட்டு- ஆராட்டு = தாலாட்டு. லாலாட்டு- தாலாட்டு. லால்-தால்.

ஓ - சோ. சோ என்பது விலங்கு பறவைகளைத்துரத்தும் குறிப்பசை. ஒப்பு - சோப்பு. சோப்புதல் = ஈயோட்டுதல்.

ஈச்சோப்பி = ஈயோட்டும் கருவி.

அரசன் கொலுவீற்றிருப்பைக் குறிக்கும் ஓலக்கம் என்னும் சொல், ஒல்லகம் (=கூடுமிடம்) என்பதன் திரிபன்றாயின் ஒலகம் (=ஆரவாரமான இடம்) என்பதன் திரிபாகவே யிருத்தல் வேண்டும்.

ஓல் - ஓலகம் - ஓலக்கம்.

Te. olagamu. K., Tu. olaga, Molakkam.

ஒட்டோலக்கம் = 1. பேரவை. 2. ஆரவாரம்.

Te. oddolagamu, K. oddolaga.

ஒட்டோலக்கம் - அட்டோலக்கம் = 1. ஆரவாரம்.

2. உள்ளக்கிளர்ச்சி.

ஓல் - ஓது . ஒ.நோ: மெல்- மெது.

K., Tu., M. odu.