108
வேர்ச்சொற் கட்டுரைகள்
"நங்கை யென்னோ டுரையாய் நனியொல்லே'
(சீவக. 898)
2.உடனே."ஒல்லைக்
ஒல் - ஒல்லை = 1. சுருக்காய் (திவா.). 2. உடனே. “ஒல்லைக்
கெடும்” (குறள். 563).
ஒல்- வல் = விரைவு (சூடா.)
‘வல்லெனல்' ஒரு விரைவுக் குறிப்பு.
ஒல்லே-வல்லே = விரைவாக.
"ஒன்றின ஒன்றின வல்லே செயிற்செய்க”
(நாலடி.4)
ஒல்லை- வல்லை = விரைவாக.
'வளவரை வல்லைக் கெடும்”
(குறள். 480)
ஒ-ஒய்.
ஒய்யென = விரைவாக.
"ஒய்யென வந்தே யெடுத்தனன்”
ஒல்- கொல் =ஓர் ஒலிக்குறிப்பு.
(கலித்.37)
“கொல்லென்று சிரித்தார்கள்” என்பது உலக வழக்கு.
கொல்- கல். கல்லெனல் = பேரோசைக் குறிப்பு.
6
"கல்லென் பேரூர்"
(சிலப். வேட்டுவவரி.12)
“கணங்கொண்டு சுற்றத்தார் கல்லென் றலற" (நாலடி. 25)
கல் - கல.
‘கலகலவென்று சிரித்தல்' என்பது உலக வழக்கு.
கலகலவெனல் - கலகலெனல்.
கல் - கலி. கலித்தல் = ஒலித்தல்.
“கடவுட் பராவி நமர்கலிப்ப”
(திருக்கோ.279)
கலி = 1. ஒலி. (தொல். சொல். 349). 2. கடல் (பிங்.).
ஆர்கலி = 1. ஓசை நிறைந்த கடல். (திருவாச. 18 : 2). 2. வெள்ளம் (நெடுநல்.3)
கிளவி.
‘கலின்’, ‘கலீர்' முதலியன ஒலிக்குறிப்புச் சொற்கள்.
ஒல்- சொல் = 1. ஒலி. 2. ஒலிவடிவான பேச்சு. 3. மொழியுறுப்பான