மொழிஞா யிறெனத் தமிழகம் போற்றிடும் விழுமிய தேவ நேயப்பா வாணர்
செந்தமிழ் மறவர்! சிந்தனை ஊற்று! நந்தமிழ் தன்னில் நஞ்சினைக் கலக்கும்
நரிமாக் கலங்கிடச் செய்திடும் அரிமா! அரிவரி கற்கும் சின்னஞ் சிறாஅரும் நெருங்கிப் பழகிட வாய்ப்புத் தந்தவர்!
முறுக்கிய மீசை முகத்தில் திகழ்ந்திட
நறுக்காய்ப் பேசும் நல்லவர்! பார்ப்பனப் பொல்லார் செய்யும் சூழ்ச்சி பொறாதவர்!
நல்லார் தமக்கு நனிநல் லவரவர்
தனித்தமிழ் வளர்க்கும் தந்தை! இளைஞர்க்கு
இனித்த தமிழில் கட்டுரை வரைந்தவர்!
தொன்மை மொழியாம் தமிழினைக் காக்க
இன்னல் ஏற்றவர்! இன்றமிழ்ச் சொல்லின் வேரினைக் கண்டு விரிநூல் படைத்தார்
நூற்றாண்டு காணும் இந்நாள்
போற்றுவம் அவரின் புகழ்நிறுத் துவமே!
- புலவர் அ.நக்கீரன்
தமிழ்மன்
குடிக்கட்டகை
சென்னை
600
017
‘பெரியார் குடில்’ பி.11. குல்மொகர் குடியிருப்பு,
35, செவாலியே சிவாசி கணேசன் சாலை, தியாகராயர்நகர், சென்னை - 17.