உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




‘அம்' என்னும் வேர்ச்சொல்

9

சபா என்னும் சொல்லை வடமொழியாளர்ச+பாஎன்று பிரித்து bha, to shine என்று பொருந்தப் பொய்த்தலாகப் பொருளுரைப்பர். பர்.சட்டர்சியோ அதை ஒப்புக்கொள்ளாது, sib என்னும் தியூத்தானியச் சொல்லை மூலமாகக் காட்டுவர். sib என்பது உடன்பிறந்தாருள் ஒருவரையோ பலரையோ குறிக்கும் சொல். எருதந்துறைச் சிற்றகராதியை (The Concise Oxford Dictionary) எடுத்துப் பார்க்க. இருவகை மூலமும் எள்ளளவும் பொருந்தாமையை அறிஞர் கண்டு கொள்க.