30
ஊங்கண் = முற்காலம்.
வேர்ச்சொற் கட்டுரைகள்
“ஊங்க ணோங்கிய வுரவோன் றன்னை”(மணிமே. 21: 181) ஊங்கணோர் = முன்னோர்.
“தூங்கெயி லெறிந்தநின் னூங்கணோர் நினையின்”
முன்னிலைப் பெயர்
(புறம்.39)
முன்னிலை யிடப்பெயர்கள் முன்னால் நிற்பவனைச்சுட்டுவதால், அவை உகரச்சுட்டடியினின்றே தோன்றியுள்ளன.
முதல்நிலை
எழுவாய்
வேற்றுமையடி
ஒருமை : ஊன்
உன்
பன்மை : ஊம்
உம்
இரண்டாம் நிலை ஒருமை : நூன்
நுன்
பன்மை : நூம்
நும்
மூன்றாம் நிலை
ஒருமை : நீன்
நின்
பன்மை : நீம்
நிம்
நாலாம் நிலை
ஒருமை : நீ
பன்மை : நீயிர், நீவிர், நீர்
ஐந்தாம் நிலை
இரட்டைப் பன்மை ஊங்கள்
உங்கள்
நூங்கள்
நுங்கள்
நீங்கள்
நிங்கள்
சில சொற்களின் ஊகாரமுதல், ஈகாரமுதலாகத் திரியும்.
ஒ.நோ:
தூண்டு- தீண்டு
தூண்டா விளக்கு- தீண்டா விளக்கு
நூறு - நீறு
பூளை- பீளை
பூறு - பீறு
தமிழர்தமக்குள் பிறரை இழிந்தோன், ஒத்தோன், உயர்ந்தோன் என மூவகைப்படுத்தி, அதற்கேற்பப் பெயரும் வினையும் அமைத்த காலத்தில், ஒருமைப் பெயர் இழிந்தோனையும், ஒற்றைப்பன்மைப் பெயர் ஒத்த