உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




'உ' என்னும் வேர்ச்சொல்

எலுதல் = கையால் அல்லது மனத்தால் ஏந்துதல். ஏறுதல் = மேற்செல்லுதல்.

35

மெய்ம்முதற் சேர்க்கை

உங்கு- (துங்கு) - துங்கம் = உயர்வு.

=

உங்கு- (புங்கு) - புங்கம் = உயர்வு.

(துங்கு) - தூங்கு- தொங்கு.

தூங்குதல் = நிலத்திற் படாது உயரத்திலிருத்தல், தொங்குதல், தொங்கும் ஏணையில் அல்லது கட்டிலில் உறங்குதல்.

sum.

தூங்கு = தூக்கு (பி.வி.).

தூக்குதல் = உயர்த்துதல், தொங்கவிடுதல்.

தூக்கு = தூக்கணம்.

தொங்கு- தொங்கல் = குறை. தொங்கு- தொகு- தொகை = குறை. உங்கு - நுங்கு -நூங்கு-நூக்கு - நூக்கம்

= உயரம்.

உம் - சும்- சும. சுமத்தல் = தலைமேற் பொறை கொள்ளுதல்.

சும - சுமை - சிமை = மலையுச்சி.

சிமை = சிமையம்.

ME. f. AF., OF summe, somme f. L. summa, f. summus, highest. E.

ME. f. OF. sohmet, sommette;

som. top, f. L. summum, neut. g. summus, E. summit.

(சுமல்) - சுவல் = சுமக்கும் தோட்பட்டை.

உயர்வும் மேலும் குறித்து வடமொழியாளர் ஆளும் உத் (ut, ud) என்னும் முன்னொட்டு தமிழ் உகரச்சுட்டடிப் பிறந்ததே.

டு: உத்துங்கன்(uttunga).

உத்தூளனம் (uddhulana).

துங்கன், தூள் என்பனவும் தமிழ்ச் சொற்களே.

துங்கம் - துங்கன். துகள்- தூள் - தூளி.