'உம்' என்னும் வேர்ச்சொல்
உறைமோர்- பாலை உறையச் செய்யும் மோர். உறைபனி = இறுகிய பனி.
உல்- உள் = பொருந்தியுள்ளது, உள்ளது.
41
இச் சொல் இப் பொருளில் இன்று சோழ பாண்டி நாடுகளில் வழக்கற்று, சேரநாடாகிய மலையாள நாட்டில் மட்டும் வழங்கி வருகின்றது.
டு : கேளியே உள்ளு, கண்டிட்டில்ல = கேள்விப் பாடாகத்தான் உள்ளது, கண்டதில்லை. ம. உள், க. உள்.
உள் + அது = உள்ளது. உள் + து = உண்டு.
உள்ளது - உளது, உண்டு.
ம.உண்டு,து. உண்டு, க. உண்ட்டு.
ஒன்றன்பாற் படர்க்கைக் குறிப்பு வினைமுற்றும், வினையா லணையும் பெயருமாகிய உண்டு என்னும் சொல், இன்று பால் வழுவமைதியாக இருதிணை யைம்பால் மூவிட ஈரெண்கட்கும் பொதுவாக வழங்கிவருகின்றது.
இன்றும் அதுவுண்டு, மரமுண்டு என்பவற்றில் ஒன்றன்பாற் படர்க்கைக் குறிப்பு வினைமுற்றாகவும், உண்டுபண்ணு (உள்ளது பண்ணு), உண்டாக்கு (உள்ளதாக்கு) என்பவற்றில் ஒன்றன்பாற் படர்க்கை வினையாலணையும் பெயராகவும், ஆளப்பெறுதல் காண்க. உண்டாக்கு.
ம.
உள் - உண்மை = உள்ளதாயிருக்கும் தன்மை. 'உள்ளத்தொடு பொருந்தியது' என்னும் பொருள் மொழிநூற்கு ஒவ்வாது. வாய்மை = வாய்ப்பது, நிறைவேறுவது. மெய்ம்மை = உடம்புபோல் உண்மை யானது (substance, substantiality)
உண்மை, வாய்மை, மெய்ம்மை என்னும் சொற்களின் முக்கரணத் தொடர்பு, தன்னேர்ச்சியான (accidental) போலியே. ம. உண்ம.
உள்- உளி = பொருந்திய இடம், இடம்.
உளி - உழி = பொருந்திய இடம், இடம், அமையம்.
உள் - உடு. ஒ.நோ. : தொள் = தொடு, பள்- படு.
உடு
உடன்- கூட. ம.உடன்,க.ஒடன்.
உடனே.
= கூடிய அதே நேரத்தில்.
உடன்- உடந்தை - கூட்டு, கூட்டாளி.