‘உல்' என்னும் வேர்ச்சொல்
அலைத்தல்
=
65
1. அசைத்தல். 'காலலைத் தலைய வீழ்ந்து” (திருவிளை. பழியஞ். 8). 2. அலையச் செய்தல். 3. வருத்துதல். "பெருமுலை யலைக்குங் காதின்” (திருமுருகு. 50). 4. அடித்தல். (கலித். 128). ஆறலைத்தல் = அடித்து வழிப்பறித்தல். “வன்கண்ண ராட்டிவிட் டாறலைக்கு மத்தம்" (ஐந். ஐம். 34).
அலைச்சல் = 1. திரிதல். 2. நீள்வழிச் சென்ற வருத்தம்.
அலை = அலைந்து செல்லும் நீர்த்திரை.
ம., தெ., அல. க., துளு. அலெ.
அல் - அலை- அசை.
அசைதலாவது, இடமும் வலமும் அல்லது மேலுங் கீழும் சாய்தல். சாய்தல் வளைதல் வகைகளுள் ஒன்று; வளைதலின் தொடக்கம் எனினுமாம். பொழுது சாய்தல் என்னும் வழக்கை நோக்குக.
சிகித்.
70).
அசைதல் = 1. நுடங்குதல். “அசையியற் குண்டு” (குறள். 1098). 2. ஆடுதல் (பிங்.). 3. இயங்குதல். “அவனன்றி யோரணுவு மசையாது” (தாயு. எங்கு. 1). 4. மெல்லச் செல்லுதல். 5. விட்டுப் போதல். “அசைந்திடா தொழிகவென’ (ஞானவா. 6. நீங்குதல். ‘அசையாது நிற்கும் பழி” (ஆசாரக். 74). 7. ஓய்தல். "நடைமெலிந் தசைஇய நன்மென் சீறடி” (சிறுபாண். 32). 8.கலங்குதல். அந்தக னசைந்து நின்றான்" (கந்தபு. சிங்க.310). 9. இளைப்பாறுதல். "புன்மேய்ந் தசைஇ" (பு.வெ. 1 : 11). 10. சோம்புதல். இலமென் றசைஇ யிருப்பாரை” (குறள். 1040). 11. தங்குதல். “கல்லென் சீறூர். எல்லியி னசைஇ” (அகம். 63). 12. கிடத்தல். “குறங்கின்மிசை யசைஇய தொருகை" (திருமுருகு. 109). தெ. அசியாடு.
அசைத்தல் = 1. ஆட்டுதல். "நந்திபிரான் திருப்பிரம்பை யசைத்தருள” (காஞ்சிப்பு. மணிகண். 34). 2. அசைத்துக் கட்டுதல். "புலித்தோலை யரைக்கசைத்து" (தேவா. 322 : 1), 3. அலகசைத்துத் தின்னுதல். 4. நாவசைத்துச் சொல்லுதல். "சேடனாயிர நாவினாலு மசைக்கினும்” (குற்றா. தல. திருக்குற்றா. 70). 5. தட்டுதல். “கதவஞ் சேர்த் தசைத்தகை” (கலித். 68). 6. வருத்துதல். “உயங்குநாய் நாவின் நல்லெழி லசைஇ” (சிறுபாண். 17).
அசை = 1. அசைச்சொல். 2. செய்யுளுறுப்பு வகை. 3. தாளக் காலப்பகுதி. "கொட்டு மசையும்” (சிலப். 3 3 : 16, 16, உரை). 4. விலங்குகள் இரை மெல்கை. 5. சுவடித் தூக்கு.