உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




70

ஆட்டு - ஆட்டகம்

=

வேர்ச்சொற் கட்டுரைகள்

நீராட்டுசாலை, “ஆட்டகத்தி லானைந்

துகந்தார் போலும்” (தேவா. 720 : 4).

ஆட்டு-ஆட்டை = ஒருமுறை விளையாட்டு. எ - டு : முதலாட்டை,

கடைசியாட்டை.

ஆட்டு

=

ஆட்டாளி = கருமத்தலைவன். உங்கள் கருமங்களுக் கெல்லாம் நான் ஆட்டாளியா? (உ.வ.).

ஆடு ஆடி = 1.கூத்தாடி. "மணிப்பை யரவி னாடி” (பாரத. அருச்சுனன்றவ. 113). 2. விளையாடி. 3. உருவ நிழலாடுங் கண்ணாடி. "பொன்னினாடியிற் பொருந்துபு நிற்போர்" (மணிமே. 19:90). 4. பளிங்கு. “விதிமா ணாடியின் வட்டங் குயின்று” (மணிமே. 8 : 47).

கண் + ஆடி = கண்ணாடி. ம. கண்ணாடி.

ஆடு - ஆடை = 1. அசையும் மெல்லிய துணி. 2. உடை (பிங்.). 3. ஆடைபோற் பரக்கும் காய்ச்சிய பாலேடு. "ஆடைதனை யொதுக்கிடும்” (அழகர்கல. 87).

பால் + ஆடை = பாலாடை.

பனை + ஆடை பனையாடை

பன்னாடை.

பனையரையில் ஆடைபோன் றிருப்பதால், நெய்யரி பனையாடை ஆடைபோன்றிருப்பதால்,

யெனப்பட்டது.

பன்னாடை = 1. பனை தெங்கு முதலியவற்றின் மட்டை யடியில், அலசலான முரட்டுச்சணல் துணிபோல் ஒட்டிக் கொண்டிருக்கும் உறுப்பு.

2.

அலசலான

முரட்டுத்

துணிவகை

(W.).

3. நல்லதைத் தள்ளி அல்லதைக் கொள்ளும் பேதை அல்லது முட்டாள்.

பன்னாடை நெய்யரியாகப் பயன்படுத்தப் பெறுவதாலும், சாற்றைப் போக்கிச் சக்கையைப் பற்றிக்கொள்வதாலும், பய னுள்ளதை விட்டுவிட்டுப் பயனற்ற செய்தியைப் பற்றிக்கொள்ளும் பேதைக் குவமையாயிற்று.

“அன்னம் ஆவே மண்ணொடு கிளியே இல்லிக் குடம்ஆ டெருமை நெய்யரி

அன்னர் தலையிடை கடைமா ணாக்கர்”

என்பது நன்னூற் பாயிரம் (38).

பனையுறுப்பின் பெயர் தென்னை யுறுப்பிற்கானது ஒப்புமை பற்றி யென்க. ஒ.நோ : எண்ணெய் = எள் நெய், வேறு நெய்.