110
வேர்ச்சொற் கட்டுரைகள்
சார்ச்சி யல்லாத” (தொல். சொல். 84, உரை). 5. சார்விடம் (பிங்.). 6. சார்த்திக் கூறல்.
எ-டு : சார்ச்சி வழக்கு (உபசார வழக்கு).
சார்
—
சார்ந்து. சார்த்துதல்
ணைத்தல். ம. சார்த்து.
1. சாரச் செய்தல். 2. சேர்த்தல்,
சார்த்து - சாட்டு. ஒ. நோ : துவர்த்து - துவட்டு.
=
சாட்டுதல் 1. பொறுப்பை அல்லது கடமையைப் பிறனிடஞ் சார்த்துதல். 2. ஒருவர்மீது குற்றஞ் சுமத்துதல். 3. தலைக்கீடாக (வியாஜமாக)க் கொள்ளுதல். 'கோவிலைச் சாட்டி வயிறு வளர்க் கிறான்’ (உ. வ.). 'பிள்ளையைச் சாட்டி வேலையைக் கழப்புகிறாள்' (உ.வ.).
சார் - சாரி = 1. வட்டமா யோடுகை. "திரிந்தார் நெடுஞ்சாரி” (கம்பரா. வாலிவ.37).2. உலாவுகை. 3. செல்லுகை, நடை. 4. சேர்க்கை, கூட்டம். எறும்பு சாரி சாரியாய்ப் போகிறது' (உ.வ.). 5. பக்கம். அவன் வீடு வடசாரியில் இருக்கிறது' (உ.வ.).
சாரி கொள்ளுதல் = இடம் வலமாகச் சுற்றி நடஞ் செய்தல். “பதசாரி சாரிகொள்ள” (விறலிவிடு. 419).
சார் = 1. சாய்ந்த தாழ்வாரம். 2. கூடுகை (சூடா.) 3. வகுப்பு, கூட்டம். 'ஒரு சாரார்', 'ஒருசா ராசிரியர்' (உ. வ.). 4. அழகு (பிங்.). 5. பக்கம். “பழுமரத்தின் புறத்தொரு சார்” (திருவிளை. பழியஞ்சு. 12). 6. இடம் (பிங்.). 7. இடப்பொருள் வேற்றுமை யுருபு. “காட்டுச்சார்க் கொய்த சிறு முல்லை" (கலித். 117: 11).
சார் – சாரல் = 1. மலைச்சரிவு, மலைப்பக்கம். “வழையமை நறுஞ்சாரல்” (கலித். 53). 2. மலை (பிங்.). 3. பக்கம். "மாளிகையின் சாரல்” (கம்பரா. சுந்தர. ஊர்தேடு. 100). 4. சாய்ந்து பெய்யும் தூறல். “சாரல் மழை பெய்கிறது. சம்பாக் கோழி கூவுகிறது.” (சிறுவர் பாட்டு). 5. சாய்ந்து இறைக்குந்தூவானம். 6. சேர்கை, கிட்டுகை. “தாஞ்சாரற் கரிய தனுவளைத் (பாரத. திரௌபதி.
தான்”
7. மருதயாழ்த் திறங்களுள் ஒன்று.
ம. சாரல் (மழை).
சார்- சாரம் = சுவரைச் சாரக்கட்டும் மரம்.
சார் - சாரி - சாரிகை = பக்கம்.
57).
சாரல் நாடன் = மலைச்சரிவிலுள்ள நாட்டரசன். “சாரல் நாட
வாரலோ வெனவே” (குறுந். 141).