உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13

துல்' (பொருந்தற் கருத்துவேர்)

துல் - துல்லியம் =ஒப்பு.'அவனுக்கு இவன் துல்லியம்" (தத்துவப் அளவை. 3, உரை). 2. சரி. 'துல்லியமாய்ச் சொன்னான்' (உ. வ.). 3. ஒப்பக் கையெழுத்து ‘அரசரின் துல்லியஞ் சார்த்தின நீட்டு' (நாஞ்.வ.).

துல் - துலம் =1.ஒப்பு .2.இருபுறமும் ஒத்த நிறைகோல். 3. துலாநிறை. 4. கனம்.

துல் - துலா = 1. நிறைகோல். 2. ஏற்றம். 3. வண்டியின் ஏர்க்கால். 4. துலாக்கட்டை. 5. துலாவோரை. 6. தூண் மேலுள்ள போதிகையின் கீழ் வாழைப்பூ வடிவிலமைந்த அணியுறுப்பு. வ. துலா.

கைத்துலா = கையினால் ஒருவனே ஓலைப்பட்டையில் நீரிறைக்கும் சிறிய ஏற்றம். ஆளேறுந்துலா = பலர் குறுக்கு மரத்தில் ஏறிநின்று முன்னும் பின்னும் உலவ, கூந்தற் பனையடியிற் குடைந்த சாலில் ஒருவன் நீரிறைக்கும் பெரிய ஏற்றம்.

துலா - துலாம் = 1. நிறைகோல். 2. 'நாஞ்சிலுந் துலாமு மேந்திய கையினன்” (சிலப். 22 : 66). 3. துலாவோரை (பிங்.). 4. துலா (ஐப்பசி) மாதம். 5. உத்தரக்கட்டை. “செந்தனி மணித்துலாஞ் செறிந்த திண்சுவர்’” (கம்பரா. நகரப். 30). 6. துலாக் கட்டை. 7. தூண் மேலுள்ள பொதிகையின்கீழ் வாழைப்பூ வடிவிலமைந்த அணியுறுப்பு (பெருங். உஞ்சைக். 37 : 102, உரை). 8. ஏற்றம். 9. நூறு பலம் அல்லது ஐந்து வீசை கொண்ட நிறை.

ம. துலாம், வ. துலா.

துல் – துலை = 1. ஒப்பு. "தோல்வி துலையல்லார் கண்ணும் கொளல்” (குறள். 986). 2. நிறைகோல். ஞான மாத்துலை” (ஞானா. 31 : 11). 3. துலையோரை. “இடபமரிதுலை வான் கடகம்” (சிலப். 3 : 123, உரை). 4. துலைநிறைத்தானம் "மருவுந்துலையாதி யாமே வருகொடை”