128
வேர்ச்சொற் கட்டுரைகள்
கழியாது” (தொல். பொருள். 122). 4. கூட்டாயிருப்ப- வன்- வள்- து. “நறுநுதலாள் நன்மைத்துணை” (நாலடி. 381). 5. இரட்டை. "துணைமீன் காட்சியின்”(கல்லா. 5:27). 6. இரண்டு. “துணையடி”. 7. உதவி புரிவோன். 'நானோர் துணைகாணேன்” (திருவாச. 25 : 10). 8. உதவி. "தங்குமா பொருளுந் தருமமுந் துணையா” (கம்பரா. பால. நகரப். 6). 9. நண்பன். “தந்துணைக் குரைத்து நிற்பார்” (சீவக. 465). 10. கணவன். “தாழ்துணை துறந்தோர்” (சிலப். 4 : 13). 11. மனைவி. '‘துணையொடு வதிந்த தாதுண் பறவை” (அகம். 4). 12. உடன்பிறப்பு. "துணையின்றிச் சேறல் நன்றோ” (கம்பரா. கும்பகர்ண. 158). 13. அளவு. “விருந்தின் றுணைத்துணை” (குறள். 87). 14. வரை (இடைச்சொல்). “தங்கரும முற்றுந்துணை (நாலடி. 231).
துணங்கை = முடக்கிய இரு கைகளையும் விலாப்புடைகளில் ஒற்றி யடித்துக்கொண்டு, அசைந்தாடும் ஒருவகைக் கூத்து. "பிணந்தின் வாயள் துணங்கை தூங்க” (திருமுருகு. 56).
6
துண் - தூண் - திரண்ட கம்பம். “சிற்றில் நற்றூண் பற்றி” (புறம். 86). 2. பற்றுக்கோடு. துன்பந்துடைத்தூன்றுந் தூண்” (குறள். 615). ம. தூண்.
பல பொருள்கள் அல்லது கூறுகள் ஒன்றாகப் பொருந்தும் போது அல்லது சேரும்போது திரட்சியுண்டாவதால், பொருந்தற் கருத்தில் திரட்சிக் கருத்துத் தோன்றிற்று. “சேரே திரட்சி” என்னுந் தொல்காப்பிய நூற்பாவை (346) நோக்குக.
தூண் - தூணம் = 1. பெருந்தூண். "பசும்பொற் றூணத்து” (மணிமே.1:48). 2. பற்றுக்கோடு.
‘அம்’பருமைப்பொருட் பின்னொட்டு.
எ-டு -
டு : நிலை - நிலையம், மதி- மதியம் - முழுநிலா.
தூணம் - வ. ஸ்தூணா.
தூண் - (தீண்) - தீண்டு. தீண்டுதல் = 1. தொடுதல். “எங்கோலந் தீண்ட லிQ” (பு. வெ. 9: 50). 2. பாம்பு கடித்தல். "பதுமையைப் பாம்பு தீண்டிற் றென்றலும்” (சீவக. 1273). 4. பற்றுதல். “தீப்பிணி தீண்ட லரிது” (குறள். 227).
ம.தீண்டுக.
தீண்டு - சீண்டு. சீண்டுதல் = ஒரு பெண்ணைத் தீண்டிக் குறும்பு
செய்தல்.