உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1

துல்' (பொருந்தற் கருத்துவேர்)

131

டானே” (சீவக. 1862). 5. செலுத்துதல். “கடுங்கணைக டம்மைத் தொட்டனன்” (கந்தபு. சூரபன்மன்வ. 191). 6. தொடங்குதல். “அன்றுதொட் டனங்கனே யாயினான்” (கம்பரா. தாடகை. 1). “தொட்டுக் காட்டாத வித்தை சுட்டுப் போட்டாலுந் தெரியாது” (பழமொழி). 7. உண்டாதல். "பழிபாவமுந் தொடுமே” (விநாயகபு. 77: 35). 8. அடித்தல். 9. இயம் (பறை) இயக்குதல். “கலித்த வியவ ரியந்தொட் டன்ன” (மதுரைக். 304). 10. உள்ளத்தில் தொடுதல், நினைத்தல். “நின்பெருமுலை மூழ்கவென் னுளத்தினிற் றொடாமுன்" (கல்லா. 52 : 9). 11. தொட்டுச் சூளிடுதல். "தொட்டு விடுத்தே னவனை” (சீவக. 1876). 12. தொடுத்தல். செருப்பணிதல். “பாதஞ் சேரத் தொடுநீடு செருப்பு” (பெரியபு. கண்ணப்ப. 62).

13. கட்டுதல். 14. மனைவிய ரல்லாரொடு கூடுதல். ம. தொடுக, து.துடுகு. 1. தொடர்ந்திருக்கை, தொடர்ச்சி.

தொடு

தொடுப்பு

=

2. கட்டுகை, கட்டு. 3. கூட்டுறவு. 4. தொடுசு. 5. வைப்பாளன் அல்லது வைப்பாட்டி. 6. தொடக்கம். 7. பழக்கம். 8. கட்டுக்கதை. 9. குறளை. 10. செருப்பு.

தொடு- தொடல் = தொடரி (சங்கிலி).

தொடல்- தொடலி = தொடரி.

தொடல்- தொடலை = 1. மாலை. “தொடலைக் குறுந்தொடி’ (குறள். 1135). 2. மணிமேகலை. “தொடலை யல்குற் றொடித்தோண் மகளிர்” (புறம்.339).

தொடு- தொடவு - தொடவல் = மாலை.

தொடு- தொடை = 1. பூமாலை (பிங்.). 2. முத்துமாலை. “முத்துத் தொடை” (பரிபா. 6 : 16). 3. பின்னுகை. “தொடையுறு வற்கலை யாடை (கம்பரா. முதற்போ. 109). 4. கட்டு. 5. வில்லின் நாண். “தொடையை நிரம்ப வாங்கிவிடாத முன்பே' டாத முன்பே” (சீவக. 2320). யாழ் நரம்பு. 6. அம்பெய்கை. “செந்தொடை பிழையா வன்க ணாடவர்” (புறம். 3). 7. சந்து. “வணங்குதொடைப் பொலிந்த வலிகெழு நோன்றாள்”. 8. காலின் மேற்பகுதி. 9. மோனை யெதுகை முரணியைபளபெடை யென்னும் ஐவகைச் செய்யுள் தொடுப்பு.

“மோனை எதுகை முரணே இயைபென நால்நெறி மரபின தொடைவகை என்ப.”

(தொல்.1345)

“அடபெடை தலைப்பெய ஐந்து மாகும்”

(தொல்.1346)