துல்1 (பொருந்தற் கருத்துவேர்)
க.தெற
137
திறன் - திறல் = 1. வலிமை. "துன்னருந் திறல்” (புறம். 3: 8). 2. திடாரிக்கம். 3. வெற்றி. “திறல்வேந்தன் புகழ்" (பு.வெ. 9:31, கொளு). 4. ஒளி. “திறல்விடு திருமணி யிலங்கு மார்பின்” (பதிற். 46 : 3).
திறம் - திறவு = 1. உறுதி. "திறவதிற் றீர்ந்த பொருள்'. (திரிகடு. 72). 2. செவ்வை. “திறவதி னாடி (தொல். பொருள். 521). 3. தகுதி. 4. ஆம்புடை.
திறக்க = திறமையாக (நாஞ். வ.).
திறவு - (திறகு) - திறக்கு போகப்படாது” (யாழ்.).
=
கருமம். "அவன் திறக்கிலே
தில் - (திர்) - திரு = 1. திரண்ட செல்வம், செல்வம். (ஒ. நோ : வெறு வெறுக்கை = செல்வம். வெறுத்தல் செறிதல்). “சீறிற் சிறுகுந் திரு” (குறள். 568). 2. திருவம் (பாக்கியம்). “நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்” (குறள். 1072). 3. சிறப்பு. 4. அழகு. "ஒளிகெழு திருமுகம்’” (மதுரைக். 448). 5. பொலிவு (திருக்கோ. 114). 6. காந்தி. “திரு என்று காந்தி” (ஈடு, 3 : 5:10). 7. நல்வினை. “சேர்ந்தெழு நங்கை மாரே திருநங்கை மார்கள்” (சீவக. 2552), 8. தாலி. “திருவொன்றுட் படப் பட்டைக் காறை” (S.I.I.II, 157). 9. ஒருவகைத் தலையணி. "செந்திருவிற் கேற்கத் திருவும் பிறையுமிட்டு” (கூளப்ப. 140). 10. கணியன். திரு ஒருவனுக்கும் கீழாள் இரண்டுக்கும்(S.I. I. Vol. II, 294). 11. தெய்வத் தன்மை. திருச்சிற்றம்பலம், திருமூலர், திருமந்திரம், திருப்பணி. 12. திருமகள். "நினைப்பானை நீங்குந் திரு” (குறள். 519). 13. மகளிர் கொங்கைமேல் தங்குவதாகக் கருதப்படும் வீற்றுத் தெய்வம். ம., தெ., க. திரு, வ. ச்ரீ (ஸ்ரீ).
திருவன் = 1. செல்வன். 2. திருமால். "சிங்கமாய்க் கீண்ட திருவன்” (திவ். இயற்.2: 84).
திருவாளன் = 1. செல்வன். 2. ஒரு மதிப்படைச் சொல் எ - டு: திருவாளர் மாணிக்கவேல் செட்டியார் (காசிமேடு, சென்னை). 3. திருமால். 'ஒலிதிரைநீர்ப் பௌவங் கொண்ட திருவாளன்” (திவ். பெரியதி. 5: 5:1).
திருமகன்- திருமான்- வ. ஸ்ரீமான்- சீமான்.
தில் - திள் - திண் - திண்மை = 1. பருமன். 2. வலிமை. "சால்பென்னுந் திண்மையுண் டாகப் பெறின்” (குறள். 988). 3. செறிவு. “மண்ணிற் றிண்மை வைத்தோன்” (திருவாச. 3 க 26).