உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

துல் (துளைத்தற் கருத்துவேர்)

155

தொள் = தொழு = சிறு குற்றவாளிகட்குத் தண்டனையாகக் கால்களை மாட்டி வைக்கும் குட்டையென்னும் மரச்சட்டம்.

தொளை = 1. துளை. “தொளைகொடாழ் தடக்கை” (கம்பரா. சித்திர.

29). 2. மூங்கில் (பிங்.).

தொள்- தொழு = 1. தொழில். 2. பயிர்த்தொழில்.

தொழு- தொழுவன் = 1. தொழிலாளி. 2. பயிரிடுவோன். தொழுவர் = 1. தொழில் செய்வார். “நீர்த்தெவு நிரைத் தொழுவர்” (மதுரைக். 89). 2. உழவர். “நெல்லரி தொழுவர்” (புறம். 209).

ஒன்று

தொழு- தொழில் = 1. செயல். “பிறிது தொழி லறியா வாகலின்’ (புறம். 14). 2. உழவு, கைத்தொழில், வரைவு, வாணிகம், கல்வி, கம்மியம் என்னும் அறுதொழில்களுள் (திவா.). 3. படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் இறைவன் முத் தொழில் களுள் ஒன்று. "தோற்று வித்தளித்துப் பின்னுந் துடைத்தருள் தொழில் கள் மூன்றும்” (சி. சி. 1 : 33). 4. அலுவல். 5. தொழில்திறம். 6. வேலை. 7. ஏவல். "தொன்று மொழிந்து தொழில்கேட்ப” (மதுரைக். 72). 8. வினைச்சொல். "பெயருந் தொழிலும் பிரிந்தொருங் கிசைப்ப” (தொல். எழுத்து. 132).

உலகில் முதன்முதல் தோன்றிய விளைப்பு அல்லது உண்டாக்கத் தொழில், நிலத்தைத் தோண்டி அல்லது கொத்தி அல்லது உழுது வித்திய பயிர்த்தொழிலாதலின், தோண்டுதலைக் குறிக்கும் தொள் என்னும் மூலத்தினின்று திரிந்த தொழில் என்னும் பெயர்ச் சொல், முதற்கண் உழவுத்தொழிலையும் பின்னர்ப் பிறதொழிற் பொதுவையும் குறித்தது. தொள் என்னும் தென் சொல்லொடு till என்னும் ஆங்கிலச் சொல்லை ஒப்புநோக்க.

E. till = to prepare and use soil for crops.

tiller = ploughman, tillage = ploughing.

தொள் - தொய். தொய்தல் = 1. உழுதல். "தொய்யாது வித்திய துளர்படு துடவை” (மலைபடு. 122). 2. வினைசெய்தல். "தொய்யா வுலகத்து நுகர்ச்சியுங் கூடும்” (புறம். 214).

தொள்- தொண்டு = 1. துளை. 2. ஒன்பது. “தொண்டுபடு திவவின்” (மலைபடு.21). 3. ஒடுக்கவழி (உ. வ.). 4. உருவாஞ் சுருக்கு (அக. நி.). ம. தொண்டு.

மாந்தன் உடம்பில் ஒன்பான் துளைகள் இருப்பதால், துளையின் பெயர் அதன் தொகைக்காயிற்று. "தொண்டுபடு திவவின் முண்டக