துல்’(துளைத்தற் கருத்துவேர்)
157
குழந்தைகள் தூங்குவதற்குச் சேலையாற் கட்டியது ஏணை எனப்படும். இன்று ஏணைக்குத் தொட்டில் என்னும் பெயர் தவறாக வழங்குகின்றது.
தொள்- தொடு. தொடுதல் = 1. தோண்டுதல். "தொட்டனைத்தூறும் மணற்கேணி" (குறள். 396). 2. துளைத்தல். “உழலை மரத்தைப் போற் றொட்டன வேறு” (கலித். 106). 3. வளைய லணிதல். ப. க. தொடு. "சுறாவே றெழுதிய மோதிரந் தொட்டாள்” (கலித். 84 : 23).
=
தொடு - தொடி 1. வளையல், கைவளை. “குறுந்தொடி கழித்தகை” (புறம். 77). 2. தோள்வளை. "தொடியொடு தோணெகிழ” (குறள். 1236). 3. மறவளை, "தூங்கெயி லெறிந்த தொடித்தோட் செம்பியன்" (மணிமே. 1: 4). 4. பூண். “தொடித்தலை விழுத்தண் டூன்றி” (புறம். 243). தெ. தொடி. 5. கிணறுகளிற் படியாக உதவுமாறு (புறம்.243).தெ. வெட்டப்படும் அல்லது கட்டப்படும் சுற்றுவட்டம்.
தொள்- தோள். தோட்டல் = 1. துளைத்தல். “கேள்வியாற் றோட்கப் படாத செவி” (குறள். 418). 2. தோண்டுதல். “தெவ்வேந்த ருடறோட்ட நெடுவேலாய்” (கம்பரா. குலமுறை. 8).
தோள் = தொளை (அக. நி.).
தோள் - தோண் - தோணி = 1. மரத்திற் குடைந்து செய்யப்பட்ட அல்லது குடைந்ததுபோற் பலகையாற் பொருத்தப்பட்ட மரக்கலம். “புனைகலம் பெய்த தோணி” (சீவக. 967). 2. சிறு கப்பல். “கடன்மண்டு தோணியில்” (புறம். 299). 3. நீர்த்தொட்டி. “தாழிகள் தோணி கடாரங்கள்” (அரிச். பு. விவாக. 293). 4. இருபத்தேழாம் உடு (இரேவதி).
ம. தோணி, க., து. தோணி(d), தெ. தோனி(d); வ. த்ரோணி (d), E. dhoney.
தோள்-தோண்டு. தோண்டுதல் = 1. அகழ்தல். 2. குடைதல். 3. முகத்தல். “நெடுங்கிணற்று வல்லூற் றுவரிதோண்டி” (பெரும்பாண். 98). 4. கப்பற்சரக் கிறக்குதல். “மிசைப்பரந் தோண்டாது புகாஅர்ப் புகுந்த பெருங்கலம்” (புறம்.30).
ம. தோண்டுக, தெ., க. தோடு, து. தோடுனி.
தோண்டு- தேண்டு. தேண்டுதல் = தோண்டிப் பார்த்தாற்போல் தேடிப் பார்த்தல். "தேண்டிநேர் கண்டேன் வாழி" (கம்பரா. உருக்காட்டு. 77).
தேண்டு- தேடு. ஒ. நோ : நோண்டு - நேண்டு - நேடு. நேடுதல் = தேடுதல். நோண்டுதல் = தோண்டுதல்.