16
துல்^ (தெளிவுக் கருத்துவேர்)
துல் - துலங்கு. துலங்குதல் = 1. ஒளிர்தல் (சூடா.). 2. விளக்கமாகத் தோன்றுதல் (W.). 3. தெளிவாதல். 'துலங்கிய வமுதம் " (கல்லா. 5).
க. தொலகு, தெ. துலகிஞ்சு.
துலங்கு- துலக்கு = மினுக்கு (W.). க. தொலகு.
துலக்கு – துலக்கம் = 1. ஒளிர்வு. “துலக்க மெய்தினன் றோமில் களிப்பினே” (கம்பரா. இராவணன் களங். 1). 2. மெருகு (W.) 3. தெளிவு. துலக்கமாய்த் தெரிகிறது. (உ.வ.).
துல்- தெல். ஒ.நோ : குழு - கெழு. உ
களுள் ஒன்று).
தெல்- தென் - தென்பு = தெளிவு.
—
எ (சொல்லாக்கத் திரிபு
தென்பு - தெம்பு = 1. தெளிவு. 2. உள்ளத் தெளிவு, ஊக்கம். இந்த வேலை செய்ய எனக்குத் தெம்பாயிருக்கிறது. (உ. வ.). 3. உடல் வலிமை. உடம்பில் ஒன்றுந் தெம்பில்லையே! (உ. வ.). 4. திடாரிக்கம். "தெம்பை நானென்று காண்பேனோ” (இராமநா. உயுத். 81).
தெ.தெம்பு. ச் சொல்லைத் தெலுங்கினின்று தமிழுக்கு வந்ததாகச் செ. ப. க. க. த. அகரமுதலி காட்டியுள்ளது.
தென் -தேன் = 1. பிழிந்தெடுத்துத் தெளிந்த மது. "பாலொடு தேன்கலந் தற்றே” (குறள். 1121). 2. இனிமை. “தேனுறை தமிழும்” (கல்லா. 9).3. இனிய கள் (சூடா.). 4. இனிய மணம். “அகிற்புகை யளைந்து தேனளாய்ப் பஞ்சுடை யமளிமேற் பள்ளி யேற்பவன்” (சூளா. குமர. 17). 5. தேன் கூடு தீந்தே னெடுப்பி” (ஐங். 272). 6. தேன் வண்டு. (திவா.).
ம. தேன், தெ. தேனெ, க. ஜேனு.